அமெரிக்காவில் வளரும் இந்தியக் கலைகள்

1

தமிழ்த்தேனீ


அமெரிக்காவில் பல்வேறு கணிணி நிறுவனங்களில் பணிபுரியும் இந்தியக் கணினிப் பொறியாளர்கள் ஒன்று கூடி   வாஷிங்டன் மாகாணத்தில்  உள்ள சியாட்டில் என்னும் நகரத்தில் 2006 ம் ஆண்டு இண்டஸ் க்ரியேஷன்ஸ் என்னும் அமைப்பை ஏற்படுத்தி கலையையும், கலாச்சாரத்தையும்  தமிழ் நாடகங்கள் மூலமாக .நாடகக் கலையையும் திறம்பட  வளர்க்கிறார்கள்.

திறமையாகக் கதை சொல்லும் கலையை வளர்ப்பது , தினம் தினம் மிகுந்த வேலைப்பளுவோடு மென்பொருள் உருவாக்கிக்கொண்டிருக்கும் பொறியாளர்களின் மனதை மென்மயாக்கி, இரண்டு மணிநேரம் சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பது ஆகியவை இண்டஸ் க்ரியேஷன்சின் நோக்கம்     இந்த அமைப்பு தென்னிந்திய நாடகக்கலை வளர்க்கும் முறையைச் சார்ந்து  இயங்குகிறது

இவர்கள் தயாரிக்கும் நாடகங்களில் அனைவருமே பங்கேற்று நடிக்கிறார்கள். பங்குபெறும் அனைவரும் தாங்களாகவே முன் வந்து, மேடை நிர்வாகம், இசை, நடிப்பு, கதை அமைப்பு, நாடகத்தின் வசனம், காட்சிகளின் ஆக்கம், அரங்க வடிவமைப்பு, ஒலி ஒளி போன்றவைகளை தாங்களே திட்டமிட்டுத் தங்கள் கைகளாலேயே உருவாக்கி அவற்றை மக்கள் மகிழும் வண்ணம் அளிக்கிறார்கள் என்பது பெருமைக்குரிய செய்தி.  மேடைக்கு வேண்டிய அரங்க நிர்மாணத்துக்கு தாங்களாகவே கூடிப் பேசி வடிவமைத்து அவைகளை தங்கள் கைகளாலேயே உருவாக்குகிறார்கள். அரங்கத்தில் அமைக்கும் கட்டிடங்களை (செட்) வடிவமைத்தல், ஆடை ஆபரணங்கள் உருவாக்குதல், ஒப்பனை, இசை. இவைகளை எல்லாம் நாங்களே கற்றுக்கொண்டு செய்கிறோம் என்று பெருமையோடு சொல்கிறார்கள்.

இந்த முறையில் நாங்கள் மிக அதிகமாக எல்லாக் கலைகளையும் கற்றுக் கொள்கிறோம் என்று பெருமையோடு சொல்கிறார்கள், இங்கே உள்ள பல இந்தியர்களிடமுள்ள திறமைகளை அடையாளம் கண்டு அவர்களை இணைத்து பெரும் வெற்றி கண்டிருக்கிறார்கள் இந்த இண்டஸ் க்ரியேஷன்ஸ்.

மொத்தத்தில் ஒரு நாடகம் போட என்னென்ன தேவையோ  அத்தனையையும் அவர்கள் சுயமுயற்சியால் தாங்களே தங்கள் கைகளாலேயே  செய்து அனைவரையும் வியக்க வைக்கிறார்கள்.  இவர்களுடைய ப்ரதான நோக்கமே கடல் கடந்து பணிசெய்ய வந்திருக்கும் இந்தியர்களிடம் இருக்கும் ஒட்டுமொத்த திறமைகளை வெளிக்கொணர்ந்து, அவைகளைப் பயன்படுத்தி அமெரிக்காவில் உள்ள எல்லா மக்களையும் மகிழ்விப்பது.

நாடகக் கலையை வளர்ப்பது மட்டுமல்ல ,  இந்த நாடகக் கலை மூலமாக  ஈட்டும் பணத்தை இந்தியாவிலே இருக்கும் தொண்டு நிறுவனங்களுக்கு அளிப்பதுதான்  எங்கள்  முக்கிய நோக்கம் என்று பெருமையோடு சொல்கிறார்கள். இது வரை தொடர்ந்து ஐந்து நாடகங்களை மேடையேற்றி மகத்தான வெற்றி கண்டிருக்கிறார்கள். ரசிகப் பெருமக்களின் தொடர்ந்த ஆதரவால்  பல நாடகங்களை ஒரே நாளில் இரு முறை மேடையேற்றி இருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல இவர்களின் நாடகத்தை காணவரும் மக்களின் மூலமாக இண்டஸ் க்ரியேஷனின் புகழ்பரவி அண்டை மாநிலமான  ஒரேகான் -ல் , போர்ட்லாண்ட் நகரத்தில் இவர்களை அழைத்து நாடகம் போடச்சொல்லி வேண்டுகின்றனர். அங்கேயும் சென்று நாடகங்களை போடுகின்றனர்.  இவர்களுடைய ஆறாவது நாடகத்தை  வரவிருக்கும் ஜூலை மாதம் 10 ம் தேதி சியாட்டிலில் உள்ள கிர்க்லாண்ட் பெர்பாமென்ஸ் மையத்தில் அரங்கேற்றவுள்ளார்கள்.

இந்தியாவில் படித்து முன்னேறி அயல்நாடுகளுக்கு சென்றுவிடும் வாலிபர்கள் தாய்நாட்டுக்கு என்ன செய்கிறார்கள் என்கின்ற பலரின் கேள்விக்கு விடையாக  இவர்கள் இந்தியாவிலிருந்து அமெரிக்கா வந்து தங்கள் பணிகளையும் திறம்படச் செய்துகொண்டே தமிழையும் ,நாடகக் கலையையும் வளர்த்து அதன் மூலமாக  இவர்கள் இதுவரை செலவு போக ஈட்டிய தொகை 50,000  டாலர்கள்,அதாவது இந்திய மதிப்பில்  22 லக்‌ஷ ரூபாய்கள்.  இப்படி இவர்கள் தங்கள் பணிநேரம் தவிர மற்ற நேரங்களில் தங்கள்  உழைப்பு, நேரம் ஆகியவற்றை அளித்து ஈட்டிய இந்தப் பெருந் தொகையை இந்தியாவிலுள்ள தொண்டு நிறுவனங்களான  அசோசியேஷன் ஃபார் இந்தியாஸ் டெவலப்மெண்ட் (http://aidIndia.org),  ”சங்கரா கண் மருத்துவமனை , உதவும் கரங்கள்   போன்ற பல நிறுவனங்களுக்கும்,  அனுப்பி இருக்கிறார்கள்.

” பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்

நற்றவ  வானினும் நனி சிறந்தனவே ”

என்னும் பாரதியாரின் பாடல் வரிகளுக்கு இலக்கணமாக திகழ்கிறார்கள் இந்த இளைஞர்கள், இந்த இண்டஸ் கிரியேஷன்ஸ் நடத்துவோரைப் பாராட்டவும் இவர்களைப் பற்றிய மேல்விவரம் அறியவும் கீழ்க்கண்ட தளங்களைத் தொடர்பு கொள்ளலாம்.

www.induscreations.org

www.Facebook.com/induscreations

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “அமெரிக்காவில் வளரும் இந்தியக் கலைகள்

  1. அடி சக்கை! படைப்பாற்றலுக்கு எல்லை கிடையாது,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.