எனக்கொரு காதலி இருக்கின்றாள்…
–கவிஞர் காவிரிமைந்தன்.
ஏதோ ஒரு சில பாடல்களில் மட்டும்தான் இசையும் கவிதையும் தங்களைப்பற்றி சிலாகித்துக்கொள்ளும் இதுபோல! எடுத்த எடுப்பிலேயே.. கவிதையே பல்லவியாகிறது பாருங்கள்!
எனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள் ஏழு சுரங்களில் சிரிக்கின்றாள்.
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்து பாடும்நிலா பாலசுப்பிரமணியனுடன் இணைந்து பாடிய பாடல்! இசையமைத்த பின் எழுதப்பட்டதா.. எழுதிய பின் இசையமைத்தார்களோ.. எதுவாயினும் கவிஞர் வாலியின் கற்பனா சக்தியும் மெல்லிசை மன்னரின் இசைப் பிரவாகமும் இங்கே நம்மை ஈர்க்கும் சக்தியைப் பெற்றுவிடுகின்றன!
அருமையான வயலின் இசைக்கோர்வையோடு தொடங்குகிறது பாடல்! ஜெய்கணேஷ் மற்றும் தேங்காய் சீனிவாசன் ஆகியோரின் நடிப்பில்.. இசையால் நடத்தப்பட்டுள்ள திருவிழா! குரல்கள் மென்மையாக ஒன்றும் கம்பீரமாக ஒன்றும்!!
ராகங்களில் உள்ள பெயர்களையும்கூட பாடலில்கொண்டுவந்து வைக்கிற உக்தி கவிதாஞானம் பெற்றவர்களுக்கே கைவரக்கூடும்! இசையைப்பற்றியும் அங்கே எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது.. அதே நேரம் காதலிக்கும் பொருந்திவருகிறது! அர்த்தபுஷ்பங்களின் அர்ச்சனையில் ஆலாபனை செய்யப்பட்ட பாடலாக..
காதல் உணர்வை கவிதையில் பதிக்க கவிஞர்களுக்கா சொல்லிக் கொடுக்க வேண்டும்! அதுவும் இசையும் அதற்கேற்ப வளைந்துகொடுக்க.. குரல்களின்வழியே இன்பகங்கை வழிகிறது கேளுங்கள்!!
முத்தான முத்தல்லவோ திரைப்படத்திற்காக விளைந்த முத்தான முத்தல்லவோ இந்தப் பாடல்!
காணொளி: http://www.youtube.com/watch?v=ILzy6ev7Y4c
திரைப் படம் : முத்தான முத்தல்லவோ (1976)
பாடியவர்கள் :S P B , M S விஸ்வனாதன்
பாடல்: வாலி
இசை:M S விஸ்வனாதன்
நடிப்பு: ஜெய்கணேஷ், சுஜாதா, தேங்காய் சீனிவாசன்
இயக்கம்: R விட்டல்எனக்கொரு காதலி இருக்கின்றாள்
அவள் ஏழு சுரங்களில் சிரிக்கின்றாள்காம பத நிஸறிஸ நினி ஸ நித தப மஸ மக கப
ஆஹ ஹா ஹோ ஹோ ஹோ
எனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள்
ஏழு சுரங்களில் சிரிக்கின்றாள்
கீதம் அவளது வளையோசை
கீதம் அவளது வளையோசை
நாதம் அவளது தமிழோசை
தமிழோசைஎனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள்
ஏழு சுரங்களில் சிரிக்கின்றாள்
கீதம் அவளது வளையோசை
கீதம் அவளது வளையோசை
நாதம் அவளது தமிழோசை
தமிழோசைஎனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள்
ஏழு சுரங்களில் சிரிக்கின்றாள்பஞ்சமம் பேசும் பார்வையில் என்றும்
பஞ்சமம் பேசும் பார்வையில் என்றும்
பஞ்சணை போடும் எனக்காக
தெய்வதம் என்னும் திருமகள் மேனி
கைகளை அணைக்கும் இனிதாக
இனிதாகஎனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள்
ஏழு சுரங்களில் சிரிக்கின்றாள்என்னுடன் வாழும் இன்னொரு ஜீவன்
என்னுடன் வாழும் இன்னொரு ஜீவன்
மெல்லிசையாகும் என்னாளும்
வையகம் யாவும் என் புகழ் பேச
கைவசம் ஆகும் எதிர் காலம்
எதிர் காலம்
எனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள்
ஏழு சுரங்களில் சிரிக்கின்றாள்தேன் சுவைக் கிண்ணம் ஏந்திய வண்ணம்
நான் தரும் பாடல் அவள் தந்தாள்
மோகனம் என்னும் வாகனம் மீது
தேவதை போலே அவள் வந்தாள்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆஎனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள்
ஏழு சுரங்களில் சிரிக்கின்றாள்
கீதம் அவளது வளையோசை
நாதம் அவளது தமிழோசை
தமிழோசை