இலக்கியம்ஓவியங்கள்கவிதைகள்நுண்கலைகள்

கோவிந்தா – ஹரே – கோபாலா

சு. ரவி

வணக்கம் வாழிய நலம்

https://ia801604.us.archive.org/6/items/ThitumalaiVaasaa/03Track3IkamEnra.mp3

எனதருமை நண்பர் திரு.K.S. ராஜகோபால் அவர்களின் குரலில் கோவிந்தன் ஏழுமலையான் மீது இயற்றப்பட்ட பாடலைக் கீழ்க்கண்ட இணைப்பில் சொடுக்கிக் கேட்கலாம். இணைப்பில் ஏழுமலையான் ஓவியம்.

992CCFE5-0DF4-4C60-B9CF-51292C7A4275

கோவிந்தா – ஹரே – கோபாலா

இகமென்ற கரையங்கு மறைகின்றது
பரமென்ற தொடுவானம் விரிகின்றது. (கோவிந்தா)

அறியாமை முகிலாக இருள்சூழுது
பொருளாசை ஒருமாயச் சுழலானது
திசைகாண முடியாத படகாயினேன்
கதிராக வரவேணும் மதுசூதனா! (கோவிந்தா)

மனமெங்கும் மயலென்ற புயல்வீசுது
மறைவாக விதியென்ற மலைநின்றது
அனலாற்றில் மெழுகில் ஒரு படகாயினேன்
மழையாக வரவேணும் மதுசூதனா! (கோவிந்தா)

பவமென்ற நுரைபொங்கும் நதியோடுது
அஹங்காரம் மமகாரம் சுமையானது
பழுதான படகாக அலைமோதினேன்
பரிவாக வரவேணும் மதுசூதனா! (கோவிந்தா)

இகமென்ற கரையங்கு மறைகின்றது
பரமென்ற தொடுவானம் விரிகின்றது. (கோவிந்தா)

சு.ரவி

படிக்க, கேட்க, பார்க்க, ரசிக்க…

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க