அனைவருக்கும் இனிய சுதந்திரத் திருநாள் வாழ்த்துகள்!!

1

— கவிஞர் காவிரிமைந்தன்.

BHARATHY1

இந்தியநாட்டின் 68ஆம் சுதந்திரத் திருநாளான இன்று 15.08.2014 .. தேசியகவி பாரதியார் அவர்கள் எழுதிய இரண்டு பாடல்களை நாம் காணுவோம். இவை இரண்டும் கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தில் இடம்பெற்றவை.

பரந்துவிரிந்த உள்ளம் பாரதியிடம் காணுங்கள்.. இந்தியத் திருநாட்டின் எல்லைகள் நம் கண்முன் காட்டும் கவிஞராய்.. எழுதிடும் வரிகளில் ஒளிவெள்ளம் தெரிகிறது பாருங்கள்! ஞானரதம் ஒன்று வீதியுலா வருவதைப்போல் நெஞ்சை அள்ளும் பாடல்!

இந்த தேசத்தை எந்த அளவு நேசித்திருக்கிறார் என்கிற உண்மை புலப்படும்! சுதந்திர வேள்விதன்னை பாட்டுவழிநடத்திய புலவன் பாரினில் வேறு யாரும் உண்டோ? தொழில்வளர்ச்சி.. வணிகம்.. பண்டமாற்று.. என்று அத்துணைத்துறையிலும் முன்னேற்றம் வேண்டுமென்று மார்தட்டிச் சொன்னவர் அவரன்றோ?

கர்வமுடன் நோக்கு.. கவிதையிலே உண்மை ஒளி.. முண்டாசுக் கட்டிய புரட்சியின் முகவரி.. இவற்றை எல்லாம் பிரதிபலிக்க எஸ்.வி.சுப்பையா தமிழ்த்திரையில் தோன்றி நடித்த காட்சிகள் இன்றும் எல்லோரின் மனதிலும் பசுமையாய்! சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் திருச்சி லோகநாதன் குரல்களில் கம்பீரமாய் எழுகின்ற ஆர்ப்பரிப்பு.. ஆனந்தலயத்தில் பாரத வழிபாடு.. இது பாரதியின் ஆட்சி!!

voc

இயற்றியவர்: மகாகவி பாரதியார்
இசை: ஜி. ராமநாதன்
திரைப்படம்: கப்பலோட்டிய தமிழன்

வெள்ளிப் பனி மலையின் மீதுலாவுவோம் – அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
வெள்ளிப் பனி மலையின் மீதுலாவுவோம் – அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்

பள்ளித் தலமனைத்தும் கோவில் செய்குவோம்
பள்ளித் தலமனைத்தும் கோவில் செய்குவோம் – எங்கள்
பாரத தேசமென்று தோள் கொட்டுவோம் – எங்கள்
பாரத தேசமென்று தோள் கொட்டுவோம் – எங்கள்
பாரத தேசமென்று தோள் கொட்டுவோம் – எங்கள்
பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்

வெள்ளிப் பனி மலையின் மீதுலாவுவோம் அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே
முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே
முத்துக் குளிப்பதொரு தெங்கடலிலே
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்தே
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே
முத்துக் குளிப்பதொரு தெங்கடலிலே

வெள்ளிப் பனி மலையின் மீதுலாவுவோம் – அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித் தலமனைத்தும் கோவில் செய்குவோம் – எங்கள்
பாரத தேசமென்று தோள் கொட்டுவோம் – எங்கள்
பாரத தேசமென்று தோள் கொட்டுவோம் – எங்கள்
பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்

ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்
ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்
உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்
உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்

வெள்ளிப் பனி மலையின் மீதுலாவுவோம் – அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித் தலமனைத்தும் கோவில் செய்குவோம்
பள்ளித் தலமனைத்தும் கோவில் செய்குவோம் – எங்கள்
பாரத தேசமென்று தோள் கொட்டுவோம் – எங்கள்
பாரத தேசமென்று தோள் கொட்டுவோம் – எங்கள்
பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்
நாங்கள் தோள் கொட்டுவோம் நாங்கள் தோள் கொட்டுவோம்
நாங்கள் தோள் கொட்டுவோம்

[காணொளி: http://www.youtube.com/watch?v=zlAV8Gy8rsc]

 

சமுதாயத்தில் நல்லோரும் பொல்லாதவரும் அன்றும் இன்றும் என்றும் உள்ளனர் என்பதை நாமறிவோம். அப்படி சமுதாயக் கேடுகள் விளைவிக்கும் மாந்தரைப் பற்றி மகாகவி தன் வார்த்தைகளில் வரைந்துவைத்த இந்தப் பாட்டுவரிகள் இன்றைக்கும் என்றைக்கும் பொருந்துவனவாகவே இருக்கின்றன. உலகப் பந்தின் சுற்று நிற்கும் வரையில் மாற்றம் இதில் இல்லாதிருக்குமோ என்று தோன்றுகிறது..

இசை மேதை ஜி.ராமனாதன் அவர்கள் அமைத்திருக்கும் இசையில்.. டாக்டர் சீர்காழி கோவிந்தராஜன் பாடியிருக்கும் இந்தப் பாடல் கேட்போர் மனதில் நிறைகிறது.. எந்த உணர்வுகளோடு பாரதி இப்பாடலை எழுதினாரோ.. அந்த உணர்ச்சியை இப்பாடல் கேட்போர் நெஞ்சத்தில் விதைக்கிறது.. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடிப்பில் உயர்ந்து நிற்கும் இமயமாய் இதுபோன்ற பாத்திரப்படைப்புகளில் பரிணமிப்பார் என்பதும் அவரைப் பார்த்தே சரித்திரப் பாத்திரங்கள் தலைமுறைகளாக மக்கள் மனதில் பதிந்திருப்பதும் திண்ணம்!!

 

voc2

இயற்றியவர்: மகாகவி பாரதியார்
இசை: ஜி. ராமநாதன்
திரைப்படம்: கப்பலோட்டிய தமிழன்

நெஞ்சில் உரமும் இன்றி நேர்மைத் திறமும் இன்றி
வஞ்சனை சொல்வாரடி கிளியே வாய்ச் சொலலில் வீரரடி
உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டு சேலையென்றும்
உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டு சேலையென்றும்
செப்பித் திரிவாரடி கிளியே செப்பித் திரிவரரடி கிளியே
செய்வதறியாரடி கிளியே..
நெஞ்சில் உரமும் இன்றி நேர்மைத் திறமும் இன்றி
வஞ்சனை சொல்வாரடி கிளியே வாய்ச் சொலலில் வீரரடி

அச்சமும் பேடிமையும் அடிமை சிறு மதியும்
அச்சமும் பேடிமையும் அடிமை சிறு மதியும்
உச்சத்திற்க் கொண்டாரடி கிளியே
உச்சத்திற்க் கொண்டாரடி கிளியே
ஊமை ஜனங்களடி கிளியே
நெஞ்சில் உரமும் இன்றி
நேர்மைத் திறமும் இன்றி
வஞ்சனை சொல்வாரடி கிளியே
வாய்ச் சொல்லில் வீரரடி

சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்
சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்
சிந்தை இரங்காரடி கிளியே சிந்தை இரங்காரடி கிளியே
செம்மை மறந்தாரடி கிளியே
நெஞ்சில் உரமும் இன்றி நேர்மைத் திறமும் இன்றி
வஞ்சனை சொல்வாரடி கிளியே வாய்ச் சொலலில் வீரரடி

[காணொளி: http://www.youtube.com/watch?v=9fyratCbKZY]

 

 

ஊரும் பேரும் உன்போல் யாருக்குமில்லை
பாரதியார் என்றால் பைந்தமிழ் வெள்ளம் பாயும்
முண்டாசுக் கவிஞன் உன்னை ஒருமுறை பார்த்தால் போதும்..
உண்டாகும் உற்சாகம்.. உணர்வின் ஊற்று..
கவிதைப் பிரவாகம்.. புரட்சியின் பூபாளம்!!

எவருக்கு வரும் இந்த உருவகம்.. உள்ளமெல்லாம்..
பறவைக்கும் உறவைச் சொன்ன பெருமைகள் உனக்குத்தானே
அடிமைக்கும் உரிமை வேண்டும் விடுதலை வேள்வி என்றே
சுதந்திர தாகம்தன்னை அனைவர்க்கும் கற்பித்தானே..

தமிழுக்குப் பெருமை சேர்த்த நின் கவிதைகள்
தலை முறைகளுக்குமான உரிமையின் உயிலன்றோ!
ஞானச் செருக்கோடு வாழ்ந்த நின்போல் – இங்கு
ஞாலம் முழுதும் தேடினும் ஒருவர் இல்லை!!

சுயநலவாதிகளின் கூடாரமாய் சமுதாயம் மாறிவிடும்போது.. பொதுநலமே கே்ளவிக்குறியாகிவிடுகிறது! நம் நாடு. .நமது பாரதம். நாம் இந்தியர் என்கிற எண்ணம் மேலோங்கி.. எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்று எண்ணும் இதயத்தை மனிதர்கள் பெற வேண்டும். ஒன்றுபட்ட இந்தியாவின் ஒளிமயமான எதிர்காலம் ஒன்றே நம் குறிக்கோளாக.. வேறுபாடுகளை மறந்து வேற்றுமையில் ஒற்றுமை என்கிற தத்துவத்தை உலகிற்கு பறைசாற்ற நம்மைவிட இந்த பூமியில் வேறு எவருக்கு உரிமை இருக்கிறது?

நல்லோர் சான்றோர் மகான்கள் அவதரித்த தேசம் நமது தேசம்! நாட்டு நலனுக்காக தன்னலம் மறந்த தியாகிகள்.. தமது இன்னுயிரையும் ஈந்த தேசபக்தர்கள் இலட்சோப லட்சம்! அவர்களின் ஈடிலா நாட்டுப்பற்றுதான் நம்மை இன்று மாபெரும் ஜனநாயக நாட்டின் பிரஜையாக நடமாட வைத்திருக்கிறது. அவர்களின் இலட்சியங்களை மதிப்போம்.. அவர்கள் வழியில் நடப்போம்.. வலிமைமிக்க பாரதத்தை வளங்கள் செழிக்கும் பாரதத் திருநாட்டை உலக அரங்கில் உயர்த்தும்வரை ஓயமாட்டோம் என்றே சபதம் எடுப்போம்!

 

 

அனைவருக்கும் இனிய சுதந்திரத் திருநாள் வாழ்த்துகள்!!

— காவிரிமைந்தன்

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “அனைவருக்கும் இனிய சுதந்திரத் திருநாள் வாழ்த்துகள்!!

  1. சரியான சமயத்தில் சரியான பாடல்களைத் தந்திருக்கிறீர்கள். நன்றி. நெஞ்சில் உரமும், நேர்மைத் திறமுமே பாரதியின் மனோதர்மத்தின் இரண்டு கூறுகள் என்று நான் அடிக்கடி சொல்வதுண்டு. உங்கள் அஞ்சல் முகவரி தந்தால் என் நூல்கள் சிலவற்றை அனுப்புகிறேன், நேரம் கிடைக்கும் போது நீங்கள் படிக்க.
    சுதந்திர தின நல்வாழ்த்துகள்.
    “இதம்தரும் மனையின் நீங்கி இடர்மிகு சிறைப்பட்டாலும்
    பதம்திரு இரண்டும் மாறிப் பழிமிகுத்(து) இழிவுற்றாலும்
    விதம்தரு கோடி இன்னல் விளைந்தெமை அழித்திட்டாலும்
    சுதந்திர தேவி நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே”
    [மஹாகவி சுப்ரமண்ய பாரதியார்]
    கே.ரவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.