’திரைச்சீலை’ ஆசிரியர் ஜீவாவுக்கு பாராட்டு விழா – செய்திகள்
கோவை : ’திரைச்சீலை’ என்னும் நூல் இந்த ஆண்டிற்கான தேசிய திரை விருதினை வென்றது. 04 ஜுலை 2011 அன்று மாலை 6 மணிக்கு கோவை, கிக்கானி பள்ளியின் கலையரங்கத்தில் ’திரைச்சீலை’ நூலை எழுதிய கோவையைச் சேர்ந்த ஓவியர் திரு. ஜீவாநந்தன் அவர்களுக்கு, நண்பர்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவில் நடிகர் திரு. சிவக்குமார், எழுத்தாளர்கள் கவிஞர் திரு. புவியரசு, திரு. நாஞ்சில் நாடன் ஆகியோரும், கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
முதலில் பேசிய மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் ‘திரைச்சீலை’ பற்றிய நல்லதொரு அறிமுகம் கொடுத்தார். அடுத்து பேசிய நாஞ்சில் நாடன், சமுதாயம் மற்றும் இளைய தலைமுறையினரிடத்தில், திரையின் தாக்கம் பற்றிப் பேசினார். கவிஞர் புவியரசு பேசுகையில் ‘திரைச்சீலை’ போன்று இன்னொரு நூல் எழுதுவது சிரமம் என்றார்.
நடிகர் சிவகுமார் தனது உரையில் தன் திரையுலக அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டும், திரு. ஜீவா அவர்களைப் பாராட்டியும் பேசி அமர்ந்தார். விழாவின் இறுதியாக ஜீவா ஏற்புரை வழங்கினார். தனது உரையில் தன் பெற்றோர், குடும்பத்தார், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க, விழா இனிதே நிறைவு பெற்றது.
சில காட்சிகள் இங்கே :
ஓவியத்துக்கு அடுத்தபடியாக எழுத்திலும் உங்கள் ஆளுமை வெளிப்பட்டுள்ளது.
மனமார்ந்த வாழ்த்துக்கள்.
உங்கள நட்பு வட்டத்திற்குள் சேரக் கிடைத்ததில் பெருமை கொள்கிறேன்.
படைப்புகள் தொடர வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் ஜீவா சார்…