காதிதப்படகு 2011 – கருத்துப்பட்டறை – செய்திகள்
ஆழி பப்ளிஷர்ஸின் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் நூல் வெளியீட்டுப் பிரிவான ’பேப்பர்போட் புக்ஸ்’ சார்பாக நடத்தப்படும் நிகழ்வு ”காதிதப்படகு 2011”.
குழந்தைகள், சிறுவர்களுக்காக நூல்களை எழுதுதல், ஓவியம் வரைதல் தொடர்பான பயிற்சித்திட்டமே காகிதப் படகு 2011 ஆகும். இதில் இணைய ஆர்வம் உள்ளவர்கள் இதற்காக ஜூலை 16-17 தேதிகளில் நடத்தப்படும் இரண்டு நாள் கருத்துப்பட்டறையிலும் அதைத்தொடர்ந்து நடைபெறும் மூன்று மாத அஞ்சல் வழி பயிற்சியிலும் கலந்துகொள்ளலாம். இந்தப் பயிற்சியில் இணையும் அனைவருக்கும் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் நூல் எழுத அல்லது நூலுக்கு ஓவியம் வரைய வாய்ப்புத் தரப்படும். அவ்வாய்ப்பு சரியாக நிறைவேற்றப்படும்பட்சத்தில் அதை பேப்பர்போட் புக்ஸ் வெளியிடும்.
இந்த வாரக் கடைசியில் நடைபெறவுள்ள இந்த கருத்துப்பட்டறையில் ஓவியர் டிராட்ஸ்கி மருது, எழுத்தாளர்கள் பாமா, ’ஆயிஷா’ நடராஜன், யூமா வாசுகி, குட்டி ரேவதி, செ.ச.செந்தில்நாதன், சிவக்குமார், தமயந்தி, நாடகக் கலைஞர் முருகபூபதி உள்பட பலர் கலந்துகொண்டு பயிற்சி அளிக்கவுள்ளார்கள்.
இந்த இருநாள் கருத்துப் பட்டறை மற்றும் மூன்று மாத மதிப்பீட்டு பயிற்சி ஆகியவற்றுக்கான மொத்தக் கட்டணம் ரூ. 2000 ஆகும்.
இது குறித்து மேலும் தகவல்கள் பெற 9940147473 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.