மும்பையில் மூன்று இடங்களில் குண்டு வெடிப்பு – செய்திகள்

0

மும்பை, 13 ஜூலை 2011.  மாலை 6:45 மணி அளவில், மூன்று இடங்களில் மும்பையில் குண்டு வெடித்தது.  முதல் குண்டு வெடிப்பு, தென் மும்பை, ஜவேரி பஜார் பகுதியில் உள்ள மும்பா தேவி கோவிலின் அருகிலும், இரண்டாவது வெடிப்பு மத்திய மும்பையின் தாதர் பகுதியிலும், மூன்றாவது வெடிப்பு தெற்கு மும்பையின் சார்னி ரோட்டில்(Charni Road) உள்ள ஒபேரா ஹவுஸ் (Opera House) அருகேயும் நிகழ்ந்துள்ளது.
ஒரு சில நிமிட இடைவெளியில் நடந்துள்ள இக்குண்டு வெடிப்புக்கள், மும்பை நகரத்தையே உலுக்கியுள்ளன.  இது ஒரு தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என காவல் துறை மற்றும் புலனாய்வு அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
IED (Improvised Explosive Device) கருவி இணைக்கப்பட்ட வெடிப்பொருட்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன.  தடயவியல் நிபுணர்கள், காவல் துறை அதிகாரிகள் அனைவரும் சம்பவ இடத்தில் கூடி, தங்களின் பணியைத் தொடங்கியுள்ளனர்.
இதுவரை 21 பேர் இறந்ததாகவும், 113 பேர் காயமுற்றதாயும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மத்திய உள்துறை அமைச்சர் திரு. ப. சிதம்பரம் அவர்களின் அறிக்கை : ‘மஹாராஷ்டிரத்தின் முதலமைச்சர் என்னுடன் தொடர்பில் உள்ளார்.  மற்றவை விவரங்கள் தெரிந்த பின்!’
மஹாராஷ்டிரத்தின் முதலமைச்சர், காயமடைந்தவர்களை சந்தித்து அறுதல் தெரிவித்துள்ளார்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *