மார்கழி மலர்கள் – ஒரு மனம் (பாடல்)
இசைக்கவி ரமணன்
[mixcloud]http://www.mixcloud.com/Vallamai/%E0%AE%92%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE/[/mixcloud]
ஒருமனம் உன்னைப் பாடும்
ஒருமனம் உலகை நாடும்
இருமனம் என்னும் அவலம்
என்று தீரும்?
என்று தீரும்?
திருவளர் மயிலைக் குடிலில்
தினம் வளர் அழகே தேனே
கருவளர் முன்பே உன்னைக்
கண்டும் மறந்தேனே (ஒருமனம்)
ஒன்றும் அறியாத கன்று
ஊரெங்கும் தாயைத் தேடும்
நின்று யாரைக் கேட்கும்?
நெஞ்செலாம் துன்பம் தாக்கும்
கன்றும் தாயைப் பிரிந்தால்
தாயும் மறந்திடப் போமோ?
இன்றும் வருவாய் என்றே
என்றும் உருகி நின்றேனே! (ஒருமனம்)
19.12.2014 / வெள்ளி / கபாலீஸ்வரர் கோயிலில் / காலை 10.30?
அழகான பாடல். அருமையான கருத்து. அன்னை பராசக்திக்கு மனதை உருக்கும் அஞ்சலி. இன்னும் இது போன்றவற்றைப் பதிப்பித்து, பாடலையும் ஒலிபரப்புங்கள். மனம் மிக மகிழ்ந்தேன்; நெகிழ்ந்தேன்.
மிக்க நன்றி மீனாட்சி அவர்களே