மனிதனின் தேடல்!
-ரா.பார்த்தசாரதி
தேடல் என்பது சுவாசம் போன்றது,
ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு நிமிடமும்
ஏதோ ஒன்றைத் தேடிக்கொண்டுதான் இருக்கிறான்…
கருத்தரித்த பெண்ணிற்குப் பிள்ளையின்
முகம் தேடல்
தந்தைக்கோ பணம் தேடல்
பிறக்கும் வரை உலகம் தேடல்
பிறந்த பிறகு உணவு தேடல்
வளரும் வரைப் படிப்பு தேடல்
வளர்ந்த பின்பு பட்ட பாடம்தான் தேடல்
காதல் இல்லாதவனுக்குக் காதலி தேடல்
காதல் வந்தவனுக்குக் கல்யாணம் தேடல்
பிறக்கும் போது அலுத்துக் கொண்டே பிறந்த நாம்
இறந்த பிறகு மற்றவர்க்கு அந்த அழுகையைக் கொடுத்துச் செல்கிறோம்…
ஒரு மனிதன்
இருக்கும் வரை அன்பைத் தேடுகிறான்…
இறக்கும் வரை அரவணைப்பைத் தேடுகிறான்…
இவ்விரண்டும் இல்லாதவன் அனாதையாகிறான்!