பணம் பந்தியிலே …
— கவிஞர் காவிரிமைந்தன்.
உறவுகள் ஆயிரம் இருந்தபோதும் இன்பம் சூழ்கின்ற நேரத்தில்மட்டுமே பந்தம் கொள்வதும்… துன்பம் தொடர்கின்ற நிலையில் நம்மைவிட்டு விலகிச்செல்வதும் தொன்றுதொட்ட தொடர்கதைதான்! அன்பு பாசம் எல்லாம் வேடிக்கை வார்த்தைகளா … அவைகளுக்கு அர்த்தங்கள் கிடையாதா என்று நாம் தவிக்கிற நிலை அப்போது ஏற்படும்! இனம்புரியாத சூழலில் பணம்தானே இத்தனைக்கும் காரணம் என்றறியும்போது.. காதில் கேட்ட இந்தப் பாடல் அத்தனைக்கும் அர்த்தங்கள் சொன்னது!
1961ல் இந்தப் பாடல் உருவாக்கப்பட்டிருக்கலாம்… ஆனால் மனிதர்களுக்கு இதுபோன்ற நிரந்தரப்பாடல்களை வழங்கிய கவிஞர்களும்…. இசையமைத்த மேதைகளும்… பாடிய கலைஞர்களும் மனதில் இடம்பெற்றவர்களாகவே உலா வருகிறார்கள்.
கவிஞர் கா.மு.ஷெரீப் … தமிழ்த்திரையில் தனது பதிவுகளால் ராஜமுத்திரையிட்டிருந்தாலும் அதிக எண்ணிக்கையைத் தொட முடியாதுபோனது நமக்குத்தான் இழப்பேதவிர அவருக்கு அல்ல. எத்தனை எதார்த்த வார்த்தைகளை எடுத்தாண்டிருக்கும் திறத்தவர்…ஒவ்வொரு வார்த்தையிலும் ஓராயிரம் பொருளிருக்கும் வண்ணம் உள்ளம் தொடுகின்றார். அதற்கேற்ற இசையினை திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் தருகின்றார். இருவரின் படைப்புகளில் உள்ள ஜீவனை உணர்ந்து தன் குரலால் மெருகேற்றிவிடுகிறார் கலைமாமணி சீர்காழி கோவிந்தராஜன்.
ஏழ்மையில் வாழும் ஒருவன் தன் வாழ்வில் சந்திக்கும் போராட்டங்களில் பணம் பிரதானம் வகிக்கும் வரையில் இப்பாடல் பரிதவிப்பிற்குத் தலைமை தாங்கட்டும்!!
http://www.youtube.com/watch?v=u8fMZ9APBJs
காணொளி: http://www.youtube.com/watch?v=u8fMZ9APBJs
திரைப்படம்: பணம் பந்தியிலே (1961)
இயற்றியவர்: கவிஞர் கா.மு. ஷெரிஃப்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்பணம் பந்தியிலே குணம் குப்பையிலே – இதைப்
பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே
பிழைக்கும் மனிதனில்லே
பணம் பந்தியிலே குணம் குப்பையிலே – இதைப்
பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே
பிழைக்கும் மனிதனில்லேஒண்ணுந்தெரியா ஆளானாலும் பணமிருந்தாலே – அவனை
உய்ர்த்திப் பேச மனித கூட்டம் நாளும் தப்பாதே
என்ன அறிவு இருந்திட்டாலும் பணமில்லாத ஆளை
என்ன அறிவு இருந்திட்டாலும் பணமில்லாத ஆளை – உலகம்
எந்த நாளும் மனிதனாக மதிக்க மாட்டாதே
[பணம் பந்தியிலே குணம் குப்பையிலே]ஆளை ஆளு புகழ்வதெல்லாம் பணத்துக்காகத் தான் – பணம்
அகன்று விட்டால் புகழ்ந்த கூட்டம் இகழும் உண்மை தான்
ஏழ்மை நிலை வந்தால் நேசர் யாரும் இல்லை
ஏழ்மை நிலை வந்தால் நேசர் யாரும் இல்லை – இதை
எண்ணிப் பார்த்து நடக்காதவன் அடைவான் தொல்லை
[பணம் பந்தியிலே குணம் குப்பையிலே]உன்னால் உயர்ந்த நிலையடைந்தோர் நிறைய பேர்கள் உண்டு – அவர்கள்
உனது நிலை தாழ்ந்த பின்பு ஒதுங்குவார்கள் கண்டு
மண்ணாய் அவரை மதித்து நீயும் துணிவுமே கொண்டு
மண்ணாய் அவரை மதித்து நீயும் துணிவுமே கொண்டு – நாளும்
முயன்று மேலும் பாடுபட்டால் வெற்றியும் உண்டு
[பணம் பந்தியிலே குணம் குப்பையிலே]