கவிஞர் காவிரிமைந்தன்

காக்கை குருவி எங்கள் ஜாதி என்றான் மகாகவி பாரதி. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றான் கணியன் பூங்குன்றனார். மானுடக்கவிஞன் கண்ணதாசன் பார்வையின் விசாலத்தைப் பாருங்கள்! உலகம் பிறந்தது எனக்காக என்கிறார்.

akaviri

1997ல் அக்டோபர் திங்கள் 17 ஆம் நாள் சென்னை ராணி சீதை மன்றத்தில் கவியரசு கண்ணதாசன் கலை இலக்கிய மையம் (பம்மல்) சார்பில் நடைபெற்ற கண்ணதாசன் விழாவில் இனியதோர் பட்டிமன்றம் முனைவர் சரசுவதி ராமனாதன் தலைமையில். இலக்கியச்சுடர் த. ராமலிங்கம் கண்ணதாசன் பாடல்களின் நிலைத்தப் புகழுக்குப் பெரிதும் காரணம் சோக ராகங்களே என்கிற அணியின் தலைவராக பங்கேற்றார். அவர்தம் உரையில் .. பாசம் திரைப்படத்தில் கதாநாயகன் எம்.ஜி.ஆர் சிறைச்சாலையிலிருந்து விடுதலையாகி வெளியே வரும்போது பாடிடும் பாடலாக..

உலகம் பிறந்தது எனக்காக..
ஓடும் நதிகளும் எனக்காக..
மலர்கள் மலர்வதும் எனக்காக.. அன்னை
மடியை விரித்தாள் எனக்காக..
இந்த வரிகளின் ஆழத்தைக் குறிப்பாக வழக்கறிஞரான இராமலிங்கம் அவர்கள் அழுத்தம் திருத்தமாய்க் குறிப்பிட்டபோது அரங்கமே அதிர்ந்தது.
எல்லாம் எனக்குள் இருந்தாலும்
என்னைத் தனக்குள் வைத்திருக்கும்
அன்னை மனமே என் கோவில்
அவளே என்றும் என் தெய்வம்

akavi1
என தாயின் தரிசனம் தருகின்றார். ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையில் சலிப்புற்று எனக்கென்று என்ன உள்ளது? நான் யாருக்காக வாழ்கிறேன் என்றெல்லாம் மனம் பேதலிப்பதுண்டு. கவிஞரின் பாடல் வரிகளை நோக்குங்கள்.. Positive Approach என்பார்களே.. முழுக்க முழுக்க.. நம்பிக்கை ஊட்டும் உற்சாக வரிகள்.. மானிட வர்க்கத்திற்கு சாசனம் வரைந்தளித்தவனே.. காலத்தை வென்ற உன் காவிய வரிகளில் களிப்படைகிறோம். கவலைகளை நாங்கள் மறக்கிறோம்..

பாடல்: உலகம் பிறந்தது எனக்காக
திரைப்படம்: பாசம்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன, டி.கே. ராமமூர்த்தி
ஆண்டு: 1961

உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வது எனக்காக அன்னை மடியை விரித்தாள் எனக்காக
உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக
உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வது எனக்காக அன்னை மடியை விரித்தாள் எனக்காக
உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக

காற்றில் மிதக்கும் ஒலிகளிலே கடலில் தவழும் அலைகளிலே
இறைவன் இருப்பதை நானறிவேன் என்னை அவனே தானறிவான்
இறைவன் இருப்பதை நானறிவேன் என்னை அவனே தானறிவான்
உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக
தவழும் நிலவாம் தங்கரதம் தாரகை பதித்த மணி மகுடம்
குயில்கள் பாடும் கொண்டது எனது அரசாங்கம்
குயில்கள் பாடும் கொண்டது எனது அரசாங்கம்
உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக
எல்லாம் எனக்குள் இருந்தாலும் என்னைத் தனக்குள் வைத்திருக்கும்
அன்னை மனமே என் கோயில் அவளே என்றும் என் தெய்வம்
உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வது எனக்காக அன்னை மடியை விரித்தாள் எனக்காக

https://www.youtube.com/watch?v=Wu_2npFoJWg

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “உலகம் பிறந்தது எனக்காக

  1. கவிஞர் கண்ணதாசனின்காற்றில் மிதக்கும் ஒலிகளிலே கடலில் தவழும் அலைகளிலே
    இறைவன் இருப்பதை நானறிவேன் என்னை அவனே தானறிவான் , தன்னம்பிக்கைக்கு உற்சாகம் ஊட்டும் பாடல் வரிகள். காணொளியை கண்டு இன்பம் அடைந்தேன். நன்றி வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *