கனவு இல்லம் – தொலைக்காட்சி நிகழ்ச்சி

0

ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் பிற்பகல் 3:30 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் புதிய நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி “ட்ரீம் ஹோம்”.

நகரங்களில் வாழும் மனிதர்களுக்கு மட்டுமல்லாது கிராமங்களில் வசிக்கும் மனிதர்களுக்கும் சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்றும் அதை சிறப்புடன் பராமரிக்க வேண்டும் என்றும் பொதுவான ஆசை அதிகரித்துவருகிறது.  இந்த ஆசைக்கு சிறந்த வடிகாலாய் ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சி வழங்கும் நிகழ்ச்சியே இது.

வசிப்பதற்கு மட்டுமின்றி எதிர்கால முதலீட்டுக்காகவும் பெரும்பாலான மக்கள் தற்போது நிலங்களிலும், இல்லங்களிலும் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர்.  தங்கத்தைவிட பல மடங்கு விலை உயர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையால் இதில் பொதுமக்களின் நாட்டம் அதிகரித்துள்ளது.

இதற்காகவே ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சி அரங்கேற்றியுள்ள இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் பல்வேறு வல்லுநர்கள் கலந்து கொண்டு நேயர்கள் எழுப்பும் வினாக்களுக்கும் ஐயங்களுக்கும் விடையளிக்கின்றனர்.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.