-மலர் சபா

மதுரைக் காண்டம் – 06: கொலைக்களக்  காதை

மாதரி கண்ணகியைத் தக்கதோர் இல்லத்தில் சேர்த்து, அவளுக்கு வேண்டும் பணி செய்வதற்கு ஏற்றவர்களை நியமித்தல்

பெறுவதற்கரிய மடந்தையான கண்ணகியை
அடைக்கலமாகப் பெற்ற
மிக்க மகிழ்ச்சியடைந்தவளான                                Ravi_Varma-Shakuntala_columbia
இடைக்குல ஆய்ச்சி மாதரி,
மோர் விற்றுக் கிடைத்த பொருளால்
உணவை உண்டு வாழும்
வாழ்க்கைமுறை உடைய ஆய்ச்சியரோடு
கட்டிய வேலிகள் சூழ்ந்த
இடையர்களின் இருப்பிடத்தின்கண்
அழகும் சிறப்பும் உடைய பந்தலையும்
காவலினையும் உடைய செம்மண் பூசிய
சிறப்புவாய்ந்த சிறுவீட்டினை அடைந்தாள்.

நெருக்கமாக வளையணிந்த ஆய்ச்சியர்
சிலருடன் கூடி
நறுமலர் மாலை அணிந்த
கண்ணகியை நீராட்டினாள்.

“கூடல் நகரத்து மகளிரின்
அழகைப் பெருக்குவதற்காகப்
பொன்னால் செய்த அணிகலன்களின்
பெருமை குறைக்கும் வண்ணம்
இயற்கை அழகுடன் வந்த உனக்கு
என் மகளாகிய ஐயை
ஏவல் புரியும் பணிமகள் ஆவாள்.
பொன்னைப் போற்றிக் காப்பது போல
உன்னைப் போற்றிக் காப்பேன்.
அழகிய பூங்கோதையுடைய நங்கையே!
என்னுடன் இங்கு இருப்பாயாக”
என்றே கூறி வணங்கினாள்.

“மாதவம் செய்த கவுந்தியடிகள்
வந்த வழியின் உற்ற துன்பம் நீங்கி
உம்மைக் காக்கும் குற்றமற்ற இடத்தில்
உம்மைச் சேர்ப்பித்திருக்கிறாள்
எனவே, உன் கணவனுக்கு
இனி இவ்விடத்தில் நேரக்கூடிய
துன்பம் ஒன்றுமில்லை”
என்றே கூறினாள்.

அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 01 – 20

http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-kolaikalakathai–

 படத்திற்கு நன்றி: கூகுள்

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.