’பிலிம் காட்டியவர்கள்’ புத்தக வெளியீட்டு விழா மற்றும் கண்காட்சி – செய்திகள்
சென்னை, நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் 29 ஜுலை 2011 அன்று ‘சினிமா டுடே’ கண்காட்சி துவங்கியது. இயக்குநர்கள் அமீர், சேரன் ஆகியோர் கண்காட்சியை துவக்கி வைத்தனர். இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் உதவி இயக்குநர் யோகானந்தன் எழுதிய ‘பிலிம் காட்டியவர்கள்’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. புத்தகத்தை இயக்குநர் அமீர் வெளியிட, இயக்குநர் சேரன் பெற்றுக்கொண்டார். இந்த புத்தகம் தமிழ் சினிமாவின் வரலாற்றை சொல்லும் வகையில் எழுதப்பட்டுள்ளது.