இலக்கியம்கட்டுரைகள்

தாய்த்தமிழ்ப் பள்ளிகளைத் தூக்கி நிறுத்துங்கள்!

-அரசெழிலன் பி.இரெ

Thaaith Thamizhp Pallikal 01உங்களால் இயன்ற நன்கொடைகளைத் தவறாது தொடர்ந்து அனுப்புங்கள்.
தாய்த்தமிழ்க் கல்விக்காகத் தமிழ்நாடெங்கும் ஏறத்தாழ 100 தாய்த்தமிழ்ப் பள்ளிகள் இயங்கி வந்தன.

அரசின் ஆதரவின்மையாலும், தமிழைச் சொல்லி வயிறு வளர்த்த, வளர்க்கும் போலிகளின் ஆதரவின்மையாலும் அந்தப்பள்ளிகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டு இன்று 30 பள்ளிகளாகக் குறைந்துவிட்டன. இவை மேலும் குறைந்துவிடாமல் காக்கும் தமிழ்க்கடமை நம்முன்னே உள்ளது.

  தமிழ்வழிக்கல்விதான் சிறந்தது எனக் கழுத்து நரம்பு புடைக்கப் புடைக்கThaaith Thamizhp Pallikal 02 மேடைதோறும் வெற்று முழக்கம் முழங்குவதை விட்டுவிட்டு, எழுதுவதை விட்டுவிட்டு உங்கள் குழந்தைகளத் தமிழ்வழியில் படிக்க வையுங்கள்.

இயலவில்லையெனில் இதற்குக் கழுவாய் (பிராயச்சித்தம்) தேடிக்கொள்ளும் வகையில் மிகக்குறைந்த வாய்ப்பாகத் தாய்த்தமிழ்ப் பள்ளிகளுக்குத் தொடர்ந்து நன்கொடைகளையாவது அனுப்புங்கள்.

 

 

 

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க