நிர்வாண நேனோ செகண்ட்ஸ்… -11

5
  • ரிஷி ரவீந்திரன்

முன் கதை: 00, 01 ,02, 03, 04, 05, 06, 07, 08, 09, 10

இனி ….

  • புத்தாலயம்.

    ”ஆரா…வானோ பிந்திசாரம்…போதிசத்வா…தந்திரம் ப்ரஸ்ன்னா….” என்ற அந்தப் புகழ்வாய்ந்த பாடலினைப் பாடிக்கொண்டிருந்தனர்.

    [audio:https://www.vallamai.com/wp-content/uploads/2011/08/Bhuddha-Song.mp3|titles=Bhuddha Song]

    நித்ய சாந்தி பிக்கு தவத்திற்கு வந்த அப்சியாசிகளின் கேள்விகளுக்கு விடையளிக்கும் நேரம் வந்தது.

    “Enlightenment என்றால் என்ன…..?” என ஒரு பயிற்சியாளர் கேட்க,

    ”ஞானம் அல்லது Enlightenment என்பது எந்த ஒன்றையும் அதனது உண்மையான நிஜத்துடன் தெரிஞ்சிக்கற ஒரு நிகழ்வு…. தட்ஸ் ஆல்….Seeing things as they really are… Sati அல்லது Mindfulness என்பது விழிப்புநிலையில் இருப்பது.  எந்த ஒரு செயலையுமே நாம் விழிப்பு நிலையில் செய்ய வேண்டும். Live in the presence…. The Power of Now…. ”

    ”இதனால் என்ன பயன்…..?”  இன்னொரு பயிற்சியாளர்.

    ”ரிசல்ட்… ரொம்ப எக்ஸலண்ட்டா அமையும்…. கார் ஓட்டும்பொழுது…. காஃபி குடிக்கும்பொழுது…. சாப்பிடும்பொழுது…. பேசும்பொழுது…. நடக்கும்பொழுது…. என எல்லாவற்றிலும் விழிப்பு நிலையில் இருக்க இருக்க…. நம் கர்மாக்கள் ரொம்ப ஈஸியா அழிஞ்சிடறது…..

    குறிப்பா சஞ்சித கர்மான்ற அழிக்கவே முடியாத அந்தக் கர்மாக்களைக் கூட இது மிகவும் எளிதாக அழித்துவிடுகின்றது….

    ஒவ்வொரு செயலையும் பிரக்ஞையோடு செய்ய வேண்டும்….”

    “எப்படி …….?”  கூட்டத்திலிருந்து ஒருவர்.

    “நீங்க இப்போ கார் ஓட்றீங்கன்னு வச்சிக்குவம்…  “இப்போ நான் கார் ஓட்றேன்…. லெஃப்ட் இண்டிகேட்டர் போடறேன்…. இப்போ சிக்னல் யெல்லோவா இருக்றது..… இதோ இப்ப பிரேக் மிதிக்கறேன்…. ரெட் விழறதுக்கு முன்னாடி காரைக் குலுங்கலே இல்லாம ரிதமேட்டிக்காக நிறுத்தறேன்…..” அப்டீ..ன்னு ஒரு எண்ணவோட்டமும் செயலும் இணையறப்ப…. எக்ஸலெண்ட் வரும்….. ”

    “ஒரு காரியம் செய்றப்ப முழுசா இன்வால்வ் ஆகச் சொல்றீங்களா…..?”

    “நோ…. அப்டி செஞ்சா…. யூ வில் லூஸ் யுவர் கண்ட்ரோல்….. யு வில் பீ ஈட்டன் பை எக்ஸ்டார்னல்ஸ்…..”

    “அப்றம்…..?”

    “முழுசா ஈடுபடறப்ப அங்கே சுயக் கட்டுப்பாடு ஆப்சண்ட் ஆயிடும்….. இதனால் நாம என்ன செய்றோம்ன்ற பிரக்ஞையே இல்லாம நாம செயல் செய்துட்ருப்போம்…. அப்டி இல்லாம நம்ம மனச ரெண்டாப் பிரிச்சிக்கணும். ஒரு பகுதியை நாம செய்யும் கர்மால எக்சிக்யூட் பண்ணப் பயன்படுத்தணும்…. இன்னொரு பகுதிய அந்தக் கர்மா செய்றத வாட்ச் பண்ணனும்….

    உதாரணமா இப்போ நான் பேசறேன்…. என்னோட ஒரு பகுதி மனசு என்னோட பேச்சை டெலிவரி பண்றதுல இருக்கு….. இன்னொரு பகுதி மனஸ் நான் சொல்ல வந்த கருத்தை ஒழுங்கா சொல்றேனா…..? என்னோட பாடி லாங்க்வேஜ் சரியா வர்றதா…..? மாடுலேஷன் கரக்ட்டா இருக்கா…..? இப்டி அதை கவனிக்குது….. ரெண்டும் சம காலத்தில் நடக்கணும்…. ”

    “ஊஹூம் பிக்கு…. அப்டி செய்றப்போ…. நாம டையர்ட் ஆய்டுவோம்….. ரெண்டும் கோய்ன்சைட் ஆகாது…. ஆழ்மனசுல என்ன இருக்கோ அதுதான் வெளியே வரும்….. அதனாலதான் வேலைக்கு அப்ளை பண்றப்போக்கூட எக்ஸ்ப்ரீயன்ஸ் இருக்கா…?ன்னு கேக்றாங்க….. ஒரு காரியத்தைத் திரும்பத் திரும்பச் செய்து ஆழ்மனதினில் தேக்கும்பொழுது…. அது தன்னிச்சையாக மிகச் சிறப்பாக வெளிவரும்…. கார் ஓட்டுவது…. நீச்சலடிப்பது…. இப்படி எல்லா வகைத் திறன்களும் அப்படித்தான்…… நீங்கள் சொல்றது மாதிரி செய்தால் ப்ராக்டிக்கலா சரியா வராது பிக்கு…….””

    “நோ….நோ……. இதில்,… ஒவ்வொரு நேனோ செகண்டிலும் On…. Off… இருக்கும்…. Offல் இருக்கும் அந்த நொடிகளில் நாம் நிர்வாணத்துடன் இணைகின்றோம்… நிர்வாணத்திலிருந்து செயல்படும் எதுவும் அபரிமிதமான சிறப்பான பலன்களைக் கொடுக்கும்…. Offல்… நிர்வாணத்துடன் இணையும்பொழுதே நாம் விழிப்பு நிலையில் இருக்கின்றோம்….

    நார்மலா நீங்க நல்லா கவனிங்க…. ஒவ்வொரு . நொடியிலும் நீங்கள் வெளி உலகத்தால் உங்களையறியாமலேயே ஹிப்னாடைஸ் பண்ணப்படுவீர்கள்…. சாஃப்ட்வேர் ஆகட்டும்…. கம்ப்யூட்டர் ஆகட்டும்…. கல்வியாகட்டும்…. அறிவியலாகட்டும்….எல்லாத் துறைகளில் இருப்பவர்களுக்கும் இந்தப் பிரச்சினை உண்டு. ரொம்ப பரபரப்பாக வேலை செய்துகொண்டே இருப்பார்கள்…. ஆனால் முடிவில் பார்த்தால் எதுவும் உருப்படியாக இருப்பதில்லை…. ஆற்றல் விரயம்…. இதுதான் நிஜம்….”

    கூட்டம் அமைதியாயிருந்தது.

    ”விழிப்புநிலை, சமாதி, மெய்ஞானம் இந்த மூன்றும் கலக்கும்பொழுது புத்தர் கூறிய எட்டு வகையான அந்த நன்னெறிகளும் மிகவும் எளிதாக அமைகின்றன…. தொடர்ந்து கவனிக்கும்பொழுது….சாட்சியாய் இருக்கும்பொழுது… நேனோ செகண்ட்களில் நம்மையறியாமலேயே நிர்வாணா நிலைக்குள் நுழைகின்றோம்…. இன்னும் விழிப்பு நிலை அதிகரிக்கும்…. இந்த நிலையில் நீங்கள் புறத்தால் கண்டிப்பாக ஆளப்பட மாட்டீர்கள்… மறைமுகமாக நீங்கள்தான் புறத்தை ஆள்வீர்கள்….. இது படிப்படியாக விபாஸனா பயிற்சியின் மூலமோ அல்லது Mahasati techniques மூலமோ அந்த தம்மாவைப் பயிற்சிக்கும்பொழுது சித்திக்கும்….”

    “பிக்கு…. Boredomஐ போக்குவது எப்படி…..? ”

    “You cannot make a buffalow as a boredom one…. You cannot make a rock as a boredom one…. Boredomன்னா என்ன…..?”

    கூட்டம் அமைதியாயிருந்தது….

    “ஒரு செயலைத் திரும்பத் திரும்பச் செய்யும்பொழுது ஏற்படும் சலிப்பு…. சிலர் புதுப் புது இடங்களுக்குச் சென்று புத்துணர்ச்சி பெற முயல்வர்…. இன்னும் சிலர் மது அருந்துவர்…. இப்படித் தங்களது அறிவிற்குத் தோன்றும் எல்லா வகையான வழிமுறைகளையும் முயல்கின்றனர்….. அதாவது இப்பொழுது இருக்கும் அந்த நிலையினை Off பண்ணிவிட்டு வேறொன்றினை On செய்கின்றனர். அங்கே On….Off…..மிஸ்ஸிங்….. நிர்வாணா இருக்கும்பொழுது இது மறையும்…. ஒவ்வொரு நொடியும் ஒரு குழந்தையின் உற்சாகம் பிறக்கும்….”

    ”பிக்கு இன்னொரு கேள்வி. புத்தரோ சரியான மன ஒருமைப்பாடு வேண்டும் என்றார். ஆனால் Luangpor Teean மற்றும் அவரது Mahasati Meditationல் விழிப்பு நிலையும் Mindfulnessம் அதிக அளவில் ஸ்ட்ரெஸினைக் கொடுக்கும்… அதனால் Concentration வேண்டாம் என்கின்றாரே…. இது புத்தரின் போதனையிலிருந்து வேறுபடுதே….?.”

    “சமதா மற்றும் சமாதி என்ற வார்த்தையை Paliயிலிருந்து மொழிபெயர்த்தால் அது Concentration என்பதினையே சாரும்…. புத்தா சொல்லும் சமாதி நிலையானது Stability of Mind, Purity of Mind, Mind fit to do its job… இவையே….. Laungpor Teaan சொல்லும் சமாதியானது setting up our mind to be active and aware in order to see and understand all phenomena that arise….”

    ஒரு பெண், “மனதிலிருக்கும் கடந்த கால வாழ்வின் வடுக்களை எப்படி நீக்கறது….? ரொம்ப கஷ்டமா இருக்றது……”

    “உங்களுக்குப் பிடிக்காத படம் ஒன்றின் சிடியை இன்று திரும்பத் திரும்பப் போட்டுப் பார்க்க முயற்சி செய்யுங்கள்…..”

    “முடியாது பிக்கு…..”

    “யெஸ்…. நீங்க உங்கள் கடந்த கால வடுக்களை உங்கள் மனதினில் திரும்பத் திரும்ப ஓட விடுகின்றீர்கள்….. அதுக்குப் பதிலா நீங்க சாதிச்ச சாதனைகளை….. மகிழ்ச்சியான தருணங்களை மனதினுள் ஓட விடுங்கள்….”

    அந்தப் பெண்  தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார்.

    அழுதுகொண்டே தன் பிரச்சினையை விளக்கினார்.

    தன் கணவன் தன்னை விவாகரத்து செய்துவிட்டதாகவும் வேறு பெண்ணை மணமுடித்துக் கொண்டதாயும் தன் சொத்துகள் அனைத்தையும் அபகரித்துக்கொண்டதாயும் தன் குழந்தைகளையும் தன்னிடமிருந்து பிரித்துக்கொண்டு சென்றுவிட்டதாயும் தன்னிடம் இப்பொழுது எதுவுமே இல்லையென்பதாயும்… இந்த நாற்பத்தைந்து வயதினில் தினசரி கஷ்ட ஜீவனமாய் காலம் கழிகின்றது எனவும் தனக்கு எந்த ஒரு தொழிலும் தெரியாது எனவும் எதிர்காலம் கேள்விக்குறியாய் இருக்கின்றது எனவும் அழ ஆரம்பித்தார்.

    ”உங்களிடம் என்ன இருக்கிறது….?”

    “எதுவுமே இல்லை பிக்கு….”

    “உங்கள் பெற்றோரிடமிருந்து என்ன பெற்றீர்கள்….?”

    “அதைத்தான் என் கணவர் அபகரித்துவிட்டாரே….?”

    “உங்களின் குழந்தைப் பருவம்…..?”

    “மிகவும் ஆச்சாரமான கண்டிப்பான வளர்ப்பு. கலாச்சாரத்தினைப் பின்பற்றும் வாழ்க்கை முறை ”

    “இப்பொழுது பின்பற்றுகின்றீர்களா..….?”

    “என் உயிர் உள்ளவரை அப்படியே வாழ்வேன்….”

    “உங்கள் பெற்றோர் உங்களுக்குக் கொடுத்த மிகப் பெரிய சொத்து அம்மா இது….. இதனை உங்கள் கணவரால் அபகரிக்க முடியாது….. சுயக் கட்டுப்பாடும் தனிமனித ஒழுக்கமும் இருந்தால் ஒருவன் எவ்வளவு பள்ளத்திலிருந்தாலும் ஃபீனிக்ஸ் பறவை மாதிரி மீண்டும் எழ முடியும்….  கடவுளின் ஒவ்வொரு செயலிலும் ஒரு பொருள் இருக்கும். முன்பிருந்த நிலையைவிட கனவிலும் நினைத்துப் பார்க்க இயலா உயரத்திற்கு உயர்த்தவே உங்களின் கடந்த கால நிகழ்வுகள் என ஏன் நீங்கள் நினைக்கக் கூடாது….? நம்பிக்கையோடு சிந்தியுங்கள்…. பாதை தெரியும்…. பாதை தெரிந்தால் பயணம் தொடரும்…. பயணம் தொடர்ந்தால் காட்சி கிடைக்கும்…. காட்சி கிடைத்தால் கவலை விலகும்…. நிச்சயமா உங்களால் உயரே உயரே என உயர முடியும்…. ”

    இப்பொழுது அந்தப் பெண்ணின் முகத்தில் நம்பிக்கைக் கிரணங்கள் பாய ஆரம்பித்தன.

  • —————-
  • ஐஎஸ்சி பெங்களூரின் Molecular Biophysics Unit . டாக்டர் ராமன் உயிரியல் தொழில் நுட்பத்தில் வித்தகர். ரங்கராஜின் மாமா.
  • டாக்டர் ராதாகிருஷ்ணனைச் சந்தித்து உரையாடிக்கொண்டிருந்தார். அப்பொழுது ரங்கராஜின் மூளையை எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்துகொண்டிருந்தனர்.

———————–

சிவா அதிர்ச்சியில் திட்டுத்திட்டாய் உறைந்தான்.

கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டான். இது அநேகமாய் ஒரு பிரமையாய்த்தான் இருக்க வேண்டும் என எண்ணிக்கொண்டான். பூச்சா சொன்னதை தன் மனது இப்படியாகக் கற்பனை செய்து பொய்யாக மூளைக்குத் தகவல்கள் அனுப்புகின்றனவோ…..?

சந்தேகம் தீர்க்கும் வகையில் கொஞ்சம் தன் குரலினை ஓங்கி அழுத்தி, “யாரது……? இங்கே என்ன செய்றே…..?” என அதட்ட…..

அந்தப் பெண் மெதுவே தன் முகத்தினை சிவாவினை நோக்கித் திருப்ப….

அடுத்த கணம் சிவா….

வீல் என அலறினான்.

பூனைக் கண்கள் . மூக்கு, கன்னங்களிலிருந்த  சிராய்ப்புகளில் ரத்தம் துளிர்விட்டிருந்தன.

பற்களின் ஈறுகளில் ரத்தம் வந்துகொண்டிருக்க…. தலையில் முடியெல்லாம் ஒழுங்கின்றி பரப்பிக் கிடக்க….. தலையானது முன்னும் பின்னும் நகர்ந்துகொண்டிருந்தது…..

சிவாவின் செல்கள் உறைந்திருந்தன.  பயத்தில் இதயம் படபடத்தது. ரத்த அழுத்தம் வேகமாக ஜிவ்வென எகிற ஆரம்பித்தது.

அந்த இடத்தைவிட்டு அவசர கதியில் வெளியே ஓடி வந்தான். தாத்தா நின்றிருந்தார். வெளியே நின்றிருந்த தன் யமஹாவினை அவசர அவசரமாய் ஸ்டார்ட் செய்ய…. அடம் பிடித்தது…. அது ரிப்பேராகியிருந்தது…

தொடரும்…..

        • —————————-
  • நன்றி….
  • –     “The Art of Excellence”  By Raveendran Krishnasamy, Trofford Publishing, New York.
  • –    டிக்…டிக்…டிக்… (நேர நிர்வாகத் தொடர்) முத்தமிழ் மின் குழுமம். தற்சமயம் மலேசிய நண்பனில் மறுபதிப்பு.
  • –    என் புத்த நண்பர்கள் / குரு
  • Master Sheng Yen
        • Tien Dao, CT
          Lisa McCan, CT
          Redding Meditation Society, CT
          Michael Bresnan, Ph.D, CT
          Taoist Exercise Class with Randy Kirik, CT
          Lectures on Kundalini Meditation and Unified Force Thoery   By Raveendran Krishnasamy at Redding Meditation Society,   CT, Buddhalaya at NJ.
          நித்ய சாந்தி பிக்கு
          Dr.Duanghip Gynacologist, Buddhist ,CT.

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “நிர்வாண நேனோ செகண்ட்ஸ்… -11

  1. Highly informative!

    Actually I am surprised that I was following the mentioned technique in all my activities in all these years!

    Except some theory, I dont know anything about meditation!

    Thanks for sharing!

  2. ”ரிசல்ட்… ரொம்ப எக்ஸலண்ட்டா அமையும்…. கார் ஓட்டும்பொழுது…. காஃபி குடிக்கும்பொழுது…. சாப்பிடும்பொழுது…. பேசும்பொழுது…. நடக்கும்பொழுது…. என எல்லாவற்றிலும் விழிப்பு நிலையில் இருக்க இருக்க…. நம் கர்மாக்கள் ரொம்ப ஈஸியா அழிஞ்சிடறது

    Very useful Info! Simply Love it!

  3. நல்ல பதிவு.
    தொடர்ந்து படித்து வருகிறேன்.
    நன்றி ஐயா.

  4. கருத்துகள் எப்படியிருப்பினும்… ஒரு சிலரால் ஜீரணிக்க முடியாதெனத் தோன்றினாலும்… அதனைச் சுவையாக, கோர்வையாகச் சொல்வதில் தொடர் நன்றாகவே செல்கிறது. வாழ்த்துகள்!

  5. வாருங்கள் டாக்டர் சங்கர் குமார்….

    மிக்க மகிழ்ச்சி. இந்தக் கதை நீங்கள் சொல்லித்தான் 2008ல் ஆரம்பித்தேன். முத்தமிழில் வெளியிடுவதாக அப்பொழுது திட்டமிட்டிருந்தோம். அதன்பின் நேரம் கிடைக்காததால் கதை பதிக்கவே இல்லை. எழுதிய அந்த 3 பாகங்களையும் உங்களது பார்வைக்கும், நம்ம நியூஜெர்சி நாயன்மாருக்கும், வேந்தனுக்கும் அப்றம் இன்னும் நம் நெருங்கிய ஒரு சில நட்புகளுக்கும் விமர்சனம் பண்ணித் திருத்தித் தரும்படிக் கேட்டிருந்தேன். அதனால்தான் அந்த 3 பாகங்களும் மிகச் சிறப்பாக அமைந்தது. குண்டலினி யோகாவினை ஒரு கதை வடிவினில் தரும்படிக் கேட்டுக் கொண்டீர்கள். அப்படித்தான் ஆரம்பித்தேன்.

    ஆனால் இப்பொழுது நிறைய மர்மங்கள் + சஸ்பென்ஸ் + அமானுஷ்யம் + அறிவியல் + அறிவியலுக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகள் எனக் கதை குண்டலித் தவம் + அறிவியல் + பில்லி சூன்யம் + மனோவியல் நான்கு திசைகளில் பயணிக்கின்றது.

    ஆதலால் சில விஷயங்கள் ஜீரணிக்கவே இயலாமல் இருப்பதைப் போன்று தோன்றுவது இயல்பே.

    கதையின் இறுதி அத்தியாயத்தில் அனைத்து முடிச்சுக்களும் அவிழ்க்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.