மழலை நிலா..
சாந்தி மாரியப்பன்.
அமாவாசையன்றும் பட்டுத்தெறிக்கின்றன
பௌர்ணமிச்சிதறல்கள்..
ஜன்னலில் பூத்த
மழலையின் மிழற்றல்களில்..
சோறூட்டவென்று
துணைக்கழைக்கப்பட்ட நிலா…
இடுப்பிலிருக்கும் தன் பிம்பத்தை,
தானே ஒப்பு நோக்கி
வெட்கித் தலைகுனிகிறது..
சாட்சிக்கழைக்கப்பட்ட
நட்சத்திரங்களோ,.. சிதறியோடி
மண்ணில் ஒளிந்துகொள்கின்றன,
ஒருவாய்ச்சோற்றுருண்டையிலிருந்து..
தீர்ப்பு சொல்லவந்து
தோற்றுச்சரணடைகின்றன
இசைக்கருவிகள்,
தென்றலெனத் தழுவும்,….
‘அம்மா’ என்ற மழலைச்சொல்லின் முன்…
//சோறூட்டவென்று
துணைக்கழைக்கப்பட்ட நிலா…
இடுப்பிலிருக்கும் தன் பிம்பத்தை,
தானே ஒப்பு நோக்கி
வெட்கித் தலைகுனிகிறது..//
வானத்து நிலா தேய்ந்து பின் வளரும்,
வளர்ந்து பின் தேயும்.
பிள்ளை நிலாவிற்கு வளர மட்டுமே தெரியும்!
அருமையான கவிதை!
வருடிச் செல்கிறது மனதை!
தொடருங்கள்…….
arumaiyana vaarthai jaalangal..manadhai thotta vaira varigal! 🙂
கருத்துரையிட்டமைக்கு மிக்க நன்றி
கேப்டன் கணேஷ்,
ஸ்ரீராம்.