ராஜா முத்தையா அரங்கில் சொற்பொழிவு – செய்திகள்
சென்னை : தரமணியில் உள்ள ராஜா முத்தையா அரங்கில் மாதந்தோறும் சிறப்பு சொற்பொழிவுகள் நடைபெற்று வருகின்றன. இந்த மாத சிறப்பு சொற்பொழிவு 24 ஆகஸ்ட் 2011 அன்று நடைபெறுகின்றது.
24 ஆகஸ்ட் அன்று மாலை 5:00 மணிக்கு ‘அரிய ஆவணங்கள் : பதிப்பு – பதிப்பாசிரியன் – பதிப்பகம்’ என்னும் தலைப்பில் சொற்பொழிவு நிகழ உள்ளது. சொற்பொழிவாற்றுபவர் முனைவர். ஏ. சதீஷ். இவர் சென்னை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் முது நிலை ஆய்வாளராகப் பணிபுரிகிறார்.
வாய்ப்புள்ள அனைவரும் கலந்துகொள்ளுமாறு வேண்டுகிறோம்.
மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 2254 2551 / 2254 2552