“ வழுக்கை “
சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன் முடிமாற்று சிகிச்சையின் பலனாய் உயிரிழந்தவர் ஒரு மருத்துவர் என்று வழுக்கை விழுந்த யாரோ ஒருவர் தன்னை அறிவாளியாக நினைத்துக்கொண்டு அறிவாளிகளுக்கு வழுக்கை விழும் என்று சொன்னதை நம்பி வழுக்கை விழுந்த பலர் தங்களை அறிவாளிகள் என்று நினைத்துக் கொள்கிறார்கள்
( இளநீருக்கும் வழுக்கை உண்டு )
நம் தலையில் வழுக்கை விழக் காரணம் அறிவை உபயோகப்படுத்துவது அல்ல ஏனென்றால் நமக்கிருக்கும் அறிவில் இரண்டு சதவிகதம் கூட நாம் இன்னும் உபயோகிக்கவில்லை என்று விவரம் தெரிந்தவர்கள் சொல்கின்றனர். ஆகவே அதிகமான உபயோகத்தால் தலை சூடாகி வழுக்கை விழுவதாக யாரும் தவறாக கற்பனை செய்து கொள்ள வேண்டாம். தலையில் மயிர்க்கால்களின் வேர் சத்து இழப்புதான் முடி கொட்டுவதற்கும் வழுக்கைக்கும் உண்மையான காரணம் பூமியில் சத்தில்லையென்றால் பயிர் வளராது தலையில் சத்தில்லையென்றால் ( நான் மூளையைச் சொல்லவில்லை ) கபாலத்தில் முடிவளரும் பூமியில் சத்தில்லை என்றால் முடி வளராது அப்படியே வளர்ந்தாலும் வேர்க்கால்கள் பலகீனமாய் பெயர்ந்து விழுந்து வழுக்கையை உண்டாக்கும்.
நம் முன்னோர்கள் மூடர்களல்ல குழந்தைக்கு அடிக்கடி மொட்டை அடிப்பார்கள் அப்படி மொட்டை அடிக்கும் போது வேர்கால்களில் இருக்கும் ஒருவித திரவம் தலையெங்கும் பரவும் அது மட்டுமல்ல வெட்ட வெட்ட வேர்க்கால்களின் சக்தி அதிகமாகும்.
நன்றாக யோசித்துப் பாருங்கள் நரை விழுந்தால் அந்த முடியைப் பிடுங்காதே என்பார்கள் ஏனென்றால் அந்த முடியைப் பிடுங்கும் போது அதன் வேர்க்கால்களில் இருக்கும் திரவம் மற்ற முடிகளின் வேர்க்காலிலே பட்டு அந்த முடிகளும் வெண்மைத் தன்மை பெற்று வளரும் இதுதான் நரைமுடி அதிகரிக்க காரணம்.
அது மட்டுமல்ல தேங்காய்க்கும் வழுக்கைக்கும் தொடர்பு இருக்கிறது அதனால்தான் வழுக்கை விழாமல் முடியின் சக்தி அதிகரிக்க தேங்காய் எண்ணெய் உபயோகிக்கிறோம்.
ஆக சிறு வயதிலிருந்தே மொட்டை அடித்து தேங்காய் எண்ணெய் தடவி பராமரித்தால் முடி நன்றாக வளரும் வழுக்கை விழாது இழுக்கையும் வழுக்கையும் வந்தபின் களைய இயலாது என்பதே உண்மை
( கேரளப் பெண்களின் கருகரு கவர்சிக் கூந்தல் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல )
( நான் மொட்டை அடித்து என்று சொன்னது அவரவர் தலைக்கு மற்றவர் தலைக்கு அல்ல )
அன்புடன்
தமிழ்த்தேனீ