வாசகர் கடிதம்
பெறுநர்
எடிட்டர்
வல்லமை”
பெண்ணைப் பெற்றவர்கள் அனைவரும் வருத்தப்படும் வகையில் தங்கத்தின் விலை கூடிகொண்டே போவது ஆரோக்கியமான சமுதாயத்துக்கு உகந்ததாக தெரியவில்லை. பூமிக்கு அடியில் தங்கம் குறைவாக இருக்கிறது… டாலர் விலை குறைவு… கருப்பு பணம் வைத்திருப்போர்கள் தங்கத்தில் முதலீடு செய்கிறார்கள் என்று பல்வேறு சாக்கு போக்கு சொல்லிகொண்டிருந்தாலும், மத்திய அரசு உடனடியாக இந்த விசயத்தில் தலையிட்டு இந்த தங்கத்தின் விலையினை ஒரு கட்டுக்குள் கொண்டுவர வேண்டியது மதிய அரசின் கடமை. இல்லை என்றால் வருங்காலத்தில் கொலை கொள்ளை,வழிப்பறி-திருட்டு போன்ற செயல்கள் சர்வ சாதரணமாக சமுதாயத்தில் உருவாகவும், மணமாகாத பெண்களின் எண்ணிக்கை சமுதாயத்தில் அதிகமாகி தேவையில்லாத சமுதாய சீர்கேடுகளும் உருவாக இந்த தங்கத்தின் விலைஉயர்வு ஒரு படிக்கல்லாக அமைந்து விடும் என்பது உறுதியான உண்மை.எனவே, மதிய அரசு வெறும் அறிக்கைகளாக விட்டு கொண்டு இருக்காமல் இந்த தங்கத்தின் விலையினை கட்டுபடுத்திட உடனடியாக ஆவன செய்ய வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் ஆசை. என்னதான் மத்திய அரசு விலையினை கட்டுபடுத்த முயற்சிகள் செய்வது ஒருபுறம் என்றாலும்,மக்களிடம் “தங்கத்தின் மீதுள்ள” மோகத்தை கட்டுபடுத்த தகுந்த விழிப்புணர்வினை கொண்டு வர வேண்டும்.
நன்றி.
சித்திரை சிங்கர்,
அம்பத்தூர்
.22.08.2011
CELL No:9789778442