கடமையினை செய்யுமா ரயில்வே நிர்வாகம்…?
டு,
தி எடிட்டர் ,
வல்லமை – மின்னிதழ்
வணக்கம். சமீபத்தில் புதிய தலைமுறை வார இதழில் “பயணங்கள் துவங்குவதில்லை” என்ற தலைப்பில் ஒரு ரயில் பயணம் பற்றிய ஒரு விழிப்புணர்வு கட்டுரையினை படித்தேன் அதன் விளைவாக என்மனமதில் தோன்றிய கருத்துக்கள் இவை:
`”பயணங்கள் துவங்குவதில்லை.”கருத்துகள் அனைத்துமே நியாயமான உண்மைகள்தான். இதில் ரயில்வே நிர்வாகம்தான் தூங்கிக் கொண்டிருக்கிறது என்பதுதான் இப்போதுள்ள நடைமுறை உண்மை. வருமானம் முப்பத்தி ஐந்து லட்ச்த்தில் இருந்து எழுபது லட்சமாக உயர்ந்திருப்பது உண்மைதான் என்றாலும் உயரும் வருமானத்துக்குத் தக்கவாறு …… பயணிகளுக்கு என்ன வசதி செய்து கொடுத்திருக்கிறது ரயில்வே நிர்வாகம் என்றால் அது மிகவும் குறைவான செயல்தான் என்பது உண்மையாகும். இப்போது கூட தென் மாவட்ட ரயில்களுக்குத் தான் கூட்டமும் இடமின்மையும் அதிகமாக உள்ளது என்பது உண்மை. எனவே, பொதிகை விரைவு வண்டி ஒன்றைத் தவிர அந்த மார்கத்தில் வேறு வண்டிகள் இல்லை. .இந்த மார்கத்தில் பகல் பொழுதில் ஒரு அதி விரைவு ரயில் இயக்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இப்பகுதி மக்களுக்கு. இதற்கு கால தாமதமாகும் என்றால், இங்கிருந்து செங்கோட்டை வரை இயங்கிக் கொண்டிருந்த சாதாரணப் பயணிகள் ரயிலை மீண்டும் இயக்கலாம். செங்கோட்டை டு மதுரை டு செங்கோட்டை வரை இயங்கிக் கொண்டிருக்கும் சாதாரண பயணிகள் ரயிலை திருச்சி வரை நீட்டிக்கலாம். அதைவிட “சென்னையில் படித்தால்தான்…. வ்சித்தல்தான் பெருமை என்ற எண்ணம் மற்ற பகுதிகளில் உள்ள மக்களிடம் இருந்து அகல வேண்டும்.” ரயில்வே நிர்வாகம் டிக்கெட்டுகளை 90 நாட்களுக்கு முன் பதிவு செய்வதை மாற்றி அறுபது நாட்களாக குறைக்க வேண்டும் இல்லை தொண்ணூறு நாட்கள் முன்னமே முன் பதிவு என்றால் குறிப்பிட்ட சதவிகிதம் டிக்கெட்டுகளை மட்டுமே என்ற கட்டுப்பாட்டை கொண்டு வர வேண்டும். அதாவது ஒரு ரயிலின் முன்பதிவு தொண்ணூறு நாட்களுக்கு முன் நாற்பது சதவிகிதமும் மீதமுள்ள அறுபது சதவிகித இருக்கைகளில் முப்பது சதவிகிதம் அறுபது நாட்கள் முன்பும் மீதமுள்ள முப்பது சதவிகித இருக்கைகளில் இருபது சதவிகிதம் ஒரு மாதம் முன்பும் மீதமுள்ள பத்து சதவிகித இருக்கைகள் கடைசி வாரத்திலும் பதிவு செய்யும் வண்ணம் மாற்றியமைக்க வேண்டும்.
மிகவும் முக்கியமாக, ரயில்வே நிர்வாகம் எப்படி முன்பதிவு செய்யும் போது குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே டிக்கெட்டுகளை விற்பனை செய்கிறதோ அது போல ஒவ்வொரு விரைவு ரயில்களிலும் இணைக்கப்படும் ரிசர்வு செய்யபடாத பெட்டிகளில் உள்ள இருக்கைகளின் எண்ணிக்கைக்குத் தகுந்தவாறு மட்டுமே பயணச் சீட்டுக்களை வழங்க வேண்டும். இந்த “அன் ரிசெர்வு” டிக்கெட்ஸ் விற்பனைதனை ஒரு ஒழுங்குக்கு கொண்டு வர வேண்டியது ரயில்வே நிர்வாகத்தின் கடமையாகும். “அன் ரிசெர்வு” பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளும் மனிதர்களே அவர்களும் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கித்தான் பயணம் செய்கிறார்கள் என்பதை ரயில்வே நிர்வாகம் உணர்ந்து செயல்பட வேண்டும். அதிக ரயில் பெட்டிகள் நிற்குமளவுக்கு நடைமேடைகள் இல்லை என்கின்ற போதில் அதிக ரயில்களை இயக்க ஆவன செய்ய வேண்டியது ரயில்வே நிர்வாகத்தின் கடமையாகும். இல்லை, ஒவ்வொரு ரிசர்வு பயணிகள் ரயிலுக்கு பின்னாலும் துணை ரயிலாக வெறும் அன்-ரிசர்வு பெட்டிகள் மட்டுமே அதிக அளவில் இணைத்து ஒரு தனி ரயில் அந்தந்த மார்கத்தில் இயக்க வேண்டும். மேலும், சென்னை போன்ற பெரு நகரங்களில் இருந்து கிளம்பும் எக்ஸ்பிரஸ்/மெயில்-ரயில்களில் சீசன் டிக்கெட் வைத்திருக்கும் பயணிகள் பயணிப்பதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். சமயத்தில் இவர்கள் படுக்கை வசதியுள்ள இருக்கைகளில் கும்பலாக அமர்ந்து கொண்டு பயணிகளுக்கு கொடுக்கும் தொல்லைகள் ரொம்ப கஷ்டமாக இருக்கும். ரயில்வே காவலர்களும் இதைக் கண்டு கொள்வதில்லை என்பதுதான் கொடுமையான விசயம். அவர்கள் இறங்கும் இடம் வரை நம்மால் கையில் இருக்கும் உணவைக் கூட சாப்பிட முடியாமல் சிரமப் பட வேண்டியதுதான். அவர்கள் இறங்குவதற்குண்டான இடம் வருவதற்குள் நமக்கு பசியும் தூக்கமும் பறந்து போய் விடும் எனபதும் உண்மை நிகழ்வுகள். ரயில்வே நிர்வாகத்துக்கு வருமானத்தை அதிகரிக்க காரணகர்த்தாவாக இருக்கும் பயணிகளுக்கு வசதிகள் செய்து கொடுக்க வேண்டியது ரயில்வே நிர்வாகத்தின் கடமை. கடமையினை செய்யுமா ரயில்வே நிர்வாகம்…?
நன்றி.
சித்திரை சிங்கர்,(சங்கரநாராயணன் பாலசுப்ரமணியன்)
அம்பத்தூர்.
cell no.9789778442.23.08.2011
>>> அதைவிட “சென்னையில் படித்தால்தான்…. வ்சித்தல்தான் பெருமை என்ற எண்ணம் மற்ற பகுதிகளில் உள்ள மக்களிடம் இருந்து அகல வேண்டும்<<<
பொதுவாக யாரும் பொருள் செலவழித்துப் பெரு நகரங்களில் படிக்க/வசிக்க வேண்டும் என்று எண்ண மாட்டார்கள். இத்தகைய சிக்கல்கள் நேராதிருக்க pura என்னும் அற்புதமான திட்டத்தை டாக்டர். கலாம் அவர்கள் வடிவமைத்தார். வளர்ச்சி பரவலாவதற்கான சிறந்த திட்டம் அது. எத்தனை பேருக்கு நினைவிருக்கப் போகிறது ? எத்தனை அரசுகள் சோதனை முயற்சியாகவாவது அதை மேற்கொண்டன ?
தேவ்