வெள்ளைப் பனி மலை
ரா.பார்த்தசாரதி
பனிபடர்ந்த மலையின் மேலே
அழகினை கண்டு நின்றேன் சிலைபோலே ,
பச்சை வண்ணப்போர்வை மலைமகளை சுற்றிட,
நடுவே சுற்றி, நெளிந்து வாகனங்கள் சென்றிட !
பச்சைவண்ண என்றும் கண்களுக்கு குளிர்ச்சி
அதுவே மனிதனின் மனதிற்கு தரும் புத்துணர்ச்சி !
இயற்கை அன்னையின் அழகினை ரசித்தோமே
மனமகிழ்ச்சி கொண்டு மனதினில் பூரிப்படைதோமே!
மலைமேல் கதிரவன் ஒளி பட்டாலே
வெண்ணிற பனிமலை தன் வெண்ணிறாடை நீக்காமலே !
ஒளிர்ந்து தென்றல் காற்று வீசியதே
அருவியும், சிற்றோடையும் நடனமாடி வந்ததே !
இயற்க்கை அன்னை தந்ததெல்லாம் எல்லோர்க்கும் சொந்தமே
எனது உனது என்பதெல்லாம் இடையில் மாறும் எண்ணமே !