புவன் கணேஷ்

ஏன் உறங்கிப்போனோம்?

இத்தனை அமைதியாய்….!

இத்தனை ஆழமாய்……….!

சுயமும் சோகமும் மறந்து

ஏன் உறங்கிப்போனோம்?

இரவுகள் தினமும்

வந்து செல்கின்றன!

இருளிலே அநீதிகள்

பலவும் நடக்கின்றன.

புரண்டு படுப்பது போல்

அநீதிகளைப் புறந்தள்ளி

ஏன் உறங்கிப்போனோம்?

இத்தனை அமைதியாய்….!

இத்தனை ஆழமாய்……….!

 

உறக்கமா இல்லை மயக்கமா?

தெரியாத புரியாத ஒரு நிலை!

நாளடைவில் அதுவே

பழக்கமாகி விட்டது!

ஏன் உறங்கிப்போனோம்?

இத்தனை அமைதியாய்….!

இத்தனை ஆழமாய்……….!

 

பொய்களின் மழையில்

உண்மை என்னும்

விளக்கு அணைந்து

அறியாமை இருள்

நம்மைச் சூழுந்த பின்

நாம் வெடித்து அழுகிறோம்!

ஏன் உறங்கிப்போனோம்?

இத்தனை அமைதியாய்….!

இத்தனை ஆழமாய்……….!

 

அநீதி என்னும் களை நீக்கி

தர்மம் என்னும் பயிரை

வீடு சேர்க்க மறந்த நாம்!

ஏன் உறங்கிப்போனோம்?

இத்தனை அமைதியாய்….!

இத்தனை ஆழமாய்……….!

 

அனைவரும் ஆடி

அனைவரும் தோற்கும்

ஒரு வித்தியாசமான

விளையாட்டு!

உள்ளேயும் வெளியேயும்

கருப்பு வண்ணம் அடித்த

ஊழல் ரயில் பெட்டியில்

கண்களைக் கட்டிக் கொண்டு!

ஏன் உறங்கிப்போனோம்?

இத்தனை அமைதியாய்….!

இத்தனை ஆழமாய்……….!

 

நமக்கு தாலாட்டு தேவையில்லை!

தேவை பிடறியில் ஒரு அடி!

தேவை அடிமனத்தில் ஒரு

அணையாத நெருப்பு!

இல்லையென்றால் மீண்டும்

தூங்கிவிடுவோம் நாம்!

கனவுகளில் தொலைந்து,

நினைவுகளை இழப்போம் நாம்!

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “ஏன் உறங்கிப் போனோம்?

  1. really great !! but people will really keep the fire with them… problem with the people not with those blacksheeps

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.