க. பாலசுப்பிரமணியன்

மூளையின் வலது பகுதியும் இடது பகுதியும் .. (Right brain and Left brain)

education

மூளையைப் பற்றிய ஆராய்ச்சியில் நமக்கு மிகவும் வியப்பை அளிக்கக் கூடிய தகவல்கள் கிடைக்கின்றன. வல்லுநர்கள் பொதுவாக மூளையில் இரண்டு பிளவுகள் இருப்பதாகவும், அதை வலது மடல் (வலது பக்கப் பிளவு- Right lobe ) என்றும் இடது மடல் (இடது பக்கப் பிளவு – Left lobe ) என்றும் அழைக்கின்றனர். இந்த ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு குறிப்பிட்ட செயல்களுக்கு ஆதாரமாகவும் அந்தச் செயல்களுக்கு காரணமாக மட்டுமின்றி ஒரு கிரியா ஊக்கி போலவும் இருப்பதாகக் கருதப்படுகிறது.

இந்த இரண்டு பகுதிகளும் தனித்தனியாக இருந்தாலும் அவைகளின் செயல்கள் அந்தந்தப் பகுதிகளில் போற்றப்பட்டாலும் இந்த இரண்டு பகுதிகளையும் இணைக்கின்ற ஹைப்போதலாமஸ் என்ற பகுதியின் மேலாண்மையின் காரணமாக இரண்டு பகுதிகளின் செயல்களும் ஒருங்கிணைக்கப்பட்டு  மொத்த மூளையின் வெளிப்பாடாக நமக்கு கிடைக்கின்றது.

இன்னும் சற்றே உன்னிப்பாக நாம் அறிந்து கொள்ள முயற்சித்தால் வலது மூளையின் கட்டுப்பாட்டில் கீழ்கண்ட செயல்களைச் சொல்லலாம்.

 1. மொழி வளமை (Language fluency)
 2. கலைத் திறன்களில் மேலாண்மை (Art Appreciation)
 3. பேச்சுத் திறன் ( oratory)
 4. நாட்டியம் (ஆடல்கள்) (Dance)
 5. சங்கீதம் (Music)
 6. உணர்வுகள் (emotions)
 7. படைப்பாற்றல் (Creativity)
 8. கருணை, பச்சாதாபம் (Compassion, Empathy)
 9. பக்கவாட்டுச் சிந்தனை (Lateral Thinking)
 10. கற்பனை (Imagination)\

அதேபோல் மூளையின் இடது புகுத்தி கீழ்க்கண்ட செயல்களை தன்னுடைய கண்காணிப்பில் வைத்திருக்கின்றது.

 1. தருக்க சிந்தனை (Logical thinking )
 2. கணிதம் ( Computation )
 3. தொழில் நுட்பம் (Technology)
 4. திறனாய்வு மேலாண்மை (critical thinking)
 5. பேச்சுத்திறன், வேகம் ( Tonality, Speed )
 6. உடலசைவுகளின் மேலாண்மை (Kinesthetic competencies )
 7. வெளிப்பொருள்களைச்சார்ந்த புத்திகூர்மை (Spatial Intellligence )
 8. விளையாட்டுக்கணிப்புகள் ( Sports and games)
 9. நடிப்பு மற்றும் மேடைக்கலைத் திறன்கள் (Acting, Stage performances)
 10. அறிவியல் ஆராய்ச்சித்திறன் (Scietific thinking & Researching mind)

இதுபோன்ற மற்றும் சில திறன்கள் வலது மற்றும் இடது மூளை பகுதிகளால் பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. ஆனாலும் மேலே சொன்னபடி மூளையின் இரண்டுபகுதிகளும் இணைந்து கைகோர்த்து செயல் படுகின்றன.

உதாரணமாக நாம் பேசும் பொழுது நமது சொல்லின் வார்த்தைகளைத் தேர்ந்தெடுப்பதிலும் அதன் நயங்களை ஒழுங்குபடுத்துவதிலும் வலது மூளை செயல்படும் பொழுது சொல்லின் வேகம், குரலின் ஏற்றத்தாழ்வுகள் பேச்சில் சொற்களிடையே இருக்கும் கருத்தாழ்ந்த இடைவெளிகள் ஆகியவற்றை இடது மூளை  ஒழுங்குபடுத்திக் கொடுக்கின்றது.

அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் மூளை நரம்பியல் மற்றும் கற்றல் சார்ந்த ஆராய்சசிகளைச் செய்துகொண்டிருந்த விஞ்ஞானிகள் இந்தத் திறன்களை சரியாகச் செய்வதிலும் அவற்றை வெளிப்படுத்துவதில் இரண்டு பகுதிகளும் எவ்வாறு செயல்படுகின்றன என்ற ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டனர். அவர்கள் கணிப்பின் படி ஒருவர் பாடும் பொழுதோ அல்லது இசைக்கருவிகளை உபயோகித்து இசைக்கும் பொழுதோ அவர்களுடைய வலது மூளை அதிகம் செயல் படும் என்பதே.- ஏனெனில் சங்கீதம் வலது மூளையைச் சார்ந்த ஒரு செயலாகக் கருதப்பட்டது.

இதை உறுதிப்படுத்தும் வகையில் வாய்ப்பாட்டிலும் பல விதமான இசைக் கருவிகளை பயன்படுத்துவதிலும் வல்லமை படைத்த  சுமார் 200 பேர்கள் இசையில் ஈடுபட்டிருந்தபோது அவர்களுடைய மூளையின் வலது மற்றும் இடது பகுதிகள் விஞ்ஞான மற்றும் மருத்துவ முறையில் பரிசீலிக்கப்பட்டன. இந்தப் பரிசோதனையின் முடிவுகள் அவர்களுக்கு மிக்க வியப்பைக் கொடுப்பதாக மட்டுமின்றி சிந்தனையைத் தூண்டுவதாகவும் அமைந்தன. இந்த பரிசோதனையில் அவர்களுக்கு கிடைத்த உண்மை என்னவென்றால் இந்த இருநூறு பெரும் இசையில் ஈடுபட்டிருந்தபோது இவர்களது வலது மூளை பகுதி குறைவாகவும் இடது மூளை பகுதி கிட்டத்தட்ட 80 விழுக்காடு வேலைபார்ப்பதாகவும் அமைந்திருந்தது. மீண்டும் மீண்டும் இந்த ஆராய்ச்சியைச் செய்தபொழுதும் அதே பதில்கள் அவர்களுக்கு கிடைத்தன.

இதன் உட்கருத்து என்னவென்றால் ஒரு இசைஞானி இசைக்கும் பொழுது அந்த இசையின் நுணுக்கங்களையும், ராகம், தாளம் போன்றவற்றையும் அவர்களது மூளை தொடர்ந்து கணக்கிட்டுக் கொண்டும் சரிபார்த்துக்கொண்டும் இருக்கிறது. இந்தச் செயல் அவர்களது மூளையின் இடப்பக்கத்தில் செயல். ஆனால் அவர்களுடைய மற்றும் முன் அமர்ந்து ரசித்துக்கொண்டிருப்பவர்களுடைய மூளையின் வலது பக்கம் ஈடுபட்டு ரசனைக்கான உணர்வுகளைத் தூண்டிக்கொண்டிருக்கிறது.

ஆகவே, இசை, விளையாட்டு, நாட்டியம் போன்ற கலைகளில் ஈடுபட்டிருப்பவர்கள் கணிதத்தில் நன்றாக செயல் படுத்தல் வேண்டும் என்ற ஒரு கருத்தும் நிலவி வருகின்றது. சில நேரங்களில் கணக்குப் போட்டுக்கொண்டிருக்கும் மாணவர்கள் கூடவே இசையை ரசித்துக்கொண்டிருப்பதும் அந்த நேரங்களில் அவர்களுடைய கணிதத்திறன் சிறப்பாக அமைவதாகவும் சில ஆராய்ச்சிகள் வெளிப்படுத்துகின்றன.

தொடரும் ..

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “கற்றல் ஒரு ஆற்றல் 49

 1. ஒரு இசைஞானி இசைக்கும் பொழுது அந்த இசையின் நுணுக்கங்களையும், ராகம், தாளம் போன்றவற்றையும் அவர்களது மூளை தொடர்ந்து கணக்கிட்டுக் கொண்டும் சரிபார்த்துக்கொண்டும் இருக்கிறது. இந்தச் செயல் அவர்களது மூளையின் இடப்பக்கத்தில் செயல். ஆனால் அவர்களுடைய மற்றும் முன் அமர்ந்து ரசித்துக்கொண்டிருப்பவர்களுடைய மூளையின் வலது பக்கம் ஈடுபட்டு ரசனைக்கான உணர்வுகளைத் தூண்டிக்கொண்டிருக்கிறது.நண்பர் திரு. க பாலசுப்பிரமணியனின் மூளையின் வலது பகுதியும் இடது பகுதியும் .. (Right brain and Left brain) கட்டுரையை அருமையினும் அருமை. அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். மேலும் இந்த கட்டுரையின் தூணடுதல் காரணமாக கீழ்கண்ட இணைய முகவரிக்குச் சென்று http://cibsr.stanford.edu/ (Centre for interdisciplinary brain sciences research) பற்பல தகவல்களை கண்டு விழிப்புணர்வு அடைந்தேன். நன்றி வணக்கம்.

 2. தங்கள் கனிவான பாராட்டுதல்களுக்கு நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.