வன்முறை தடுப்புச்சட்டம்!
பவள சங்கரி
சாதிவாரியான வன்முறைகளில் 1,38077 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் 43.3% வழக்குகள் நீதி மன்றங்களால் தீர்க்கப்பட்டுள்ளன. இதில் 25.7% குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளன. இதில், 2013 – 2015 வரையிலான காலகட்டத்தில் முதல் இடத்தில் உள்ள மாநிலம் ராஜஸ்தானில் தாழ்த்தப்பட்ட, மிகவும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் மீது மிக அதிகமான தாக்குதல் நடைபெற்றுள்ளன. உத்திரப் பிரதேசம் பீகார் இந்த வன்முறையில் இரண்டாவது இடத்தில் உள்ளதாக அரசு அறிவிப்பு தெரிவிக்கிறது. தமிழகம் இதில் ஒன்பதாவது இடத்தில் (5,131 வழக்குகள் பதிவு) இருக்கிறது. 14 மாநிலங்களில் வன்முறை தடுப்புச்சட்டத்தைச் செயல்படுத்த விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் வன்முறை தடுப்புச்சட்டத்தின் 14வது பிரிவின்படி ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாவட்டங்களில் தனி நீதி மன்றங்களை அமைக்க வழிவகுக்கிறது. 8 மாநிலங்களில் ஒற்றைப்படை இலக்கங்களில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் 7.6%, தமிழ்நாடு, தெலுங்கானாவில் 7.5%, குஜராத்தில் 3.1% மேற்கு வங்கத்தில் மிகக்குறைவாக 3% குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன. சமூகநீதி அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்கள் இவை.