கற்றல் ஒரு ஆற்றல் -58
க. பாலசுப்பிரமணியன்
கற்றலும் வீட்டுச்சூழ்நிலைகளும்
சில நாட்களுக்குமுன் இந்தி மொழியிலும் அதைச்சார்ந்து மற்ற மொழிகளிலும் உருவாக்கப்பட்ட “தங்கல் என்ற ஒரு திரைப்படம். ஒரு கிராமத்தில் வாழும் மல்யுத்த வீரர் தன்னால் மல்யுத்தத்தில் தேசிய அளவில் வெற்றி பெற வாய்ப்புக்கள் கிடைக்காததால் தனக்குப் பிறக்கின்ற மகனை ஒரு நல்ல மல்யுத்த வீரனாக்கி தேசிய அளவில் பெயர் பெற வைக்க வேண்டும் என்ற கனவு காண்கிறார். ஆனால் அவருக்கு அடுத்தடுத்து பிறக்கின்ற குழந்தைகள் பெண் குழந்தைகளாக இருக்க, அவர் மனம் நொந்து தன் கனவு உடைந்து விட்டது என எண்ணுகின்றார். ஒரு நாள் தன் மகளுக்கு மல்யுத்தத்திற்கான மரபணுக்கள் இருப்பதை உணர்ந்த அவர் தன் இரு மகள்களுக்கும் மல்யுத்தப் பயிற்சி அளிக்க ஆரம்பிக்கிறார்.
கேள்விகள் எழுகின்றன:
- கிராமச் சூழ்நிலையில் பெண்கள் வயதுக்கு வந்ததும் திருமணம் செய்து பார்க்கக்கூடிய சமுதாய தடுப்புச்சுவர்கள்
- பெண்கள் படித்து என்ன செய்யப்போகிறார்கள்? வீட்டில் சமையல் அறையில் ஈடுபடுவதுதானே ..என்ற பிற்போக்குச் சிந்தனை.
- பெண்கள் இப்படித்தான் வாழவேண்டும், அவர்கள் நடையுடை, சமுதாய பார்வைகள் இந்த வரம்புக்குள் தான் இருக்கவேண்டும் என்ற கட்டுப்பாடுகள்
- பெண்களால் மல்யுத்தம் கற்றுக்கொள்ள முடியுமா. :கற்றுக் கொண்டாலும் ஆண்களுக்கு நிகராக போட்டிபோட முடியுமா என்ற என்று ஆரம்பத்திலேயே பெண்வர்க்கத்தைத் தோற்கடிக்க முயலும் வாக்குவாதங்கள்
- பெண்களின் முன்னேற்றத்தை ஏளனமாக நினைக்கும் “ஆண்வர்க்க” கருத்துக்கள்
இந்தக்கருத்துக்களை முன்வைத்து எடுக்கப்பட்ட படம்.
இந்த சூழ்நிலைகள், இந்தப் பாகுபாடுகள் பொதுவாக பல வீடுகளிலும், சமுதாயங்களில் மேலோங்கி நிற்பதை நாம் காண முடிகின்றது. ஒரே வீட்டில் என்னதான் பெண் குழந்தைகள் சிறப்பாகக் கற்றாலும் பணம் செலவழிக்கும் நேரங்களில் அதற்க்கான முதலிடம் ஆண் குழந்தைகளுக்கே கொடுக்கப்படுகிறது.
ஆராய்ச்சிகளின் அடிப்படையில், கற்றலில் ஆண் பெண் என்ற இருபாலாருக்கும் கற்றலின் திறமைகள் கிட்டத்தட்ட சரி நிகராகவே கணிக்கப்பட்டு இருக்கின்றது. ஆண் குழந்தைகள் பெண் குழந்தைகளைவிட சிறப்பாகக் கற்கும் திறனுடையவர்கள் என்பது ஒரு பொய்யான வாதம்.
மூளையின் பலவித செயல்களை ஆராய்ச்சி செய்யும் நிபுணர்கள் ஆண் பெண் என்ற இருபாலரின் மூளையின் செயல்முறைகளை நன்கு ஆராய்ந்ததில் பின் கீழ்க்கண்ட கருத்தை வெளியிட்டிருக்கின்றனர்.
“Male brains utilize nearly seven times more gray matter for activity while female brains utilize nearly ten times more white matter. What does this mean?
Gray matter areas of the brain are localized. They are information- and action-processing centers in specific splotches in a specific area of the brain. This can translate to a kind of tunnel vision when they are doing something. Once they are deeply engaged in a task or game, they may not demonstrate much sensitivity to other people or their surroundings.
White matter is the networking grid that connects the brain’s gray matter and other processing centers with one another. This profound brain-processing difference is probably one reason you may have noticed that girls tend to more quickly transition between tasks than boys do. The gray-white matter difference may explain why, in adulthood, females are great multi-taskers, while men excel in highly task-focused projects.”
இதன்படி பொதுவாக ஆண்கள் ஏதாவது ஒரு சிந்தனையிலோ அல்லது செயலிலோ இறங்கிவிட்டால் அதன் கருத்தாழத்திற்குச் சென்று விடுகின்றனர். அந்த நேரங்களில் அவர்களின் மூளை இணை இயல்பாடுகளில் நாட்டம் கொள்வதில்லை. ஆனால் பெண்பாளர்கள் ஒரு சிந்தனையிலோ அல்லது செயலிலோ ஈடுபாடுபொழுதது அவர்களுடைய மூளை சுற்று வட்டாரங்களிலும் செய்யும் செயலின் இணை ஈடுபாடுகளிலும் நாட்டம் கொள்கின்றது. இதனால் தான் பொதுவாக பெண்பாலருக்கு Multitasking என்ற ஒரே நேரத்தில் பல செயல்களை செய்யக்கூடிய திறன் இருக்கின்றது என்றும் வாதிடுகின்றனர்.
அது மட்டுமல்ல… பொதுவாக ஆண் குழந்தைகள் ஒரே இடத்தில் அதிக நேரம் அமர முடியாதவர்களாகவும் ஓரு விஷயத்தில் அதிக நேரம் கவனத்தைச் செலுத்த முடியாதவர்களாக இருப்பதும் அவர்களுடைய மூளைகளுக்குச் செல்லும் சில ஹார்மோன்களின் காரணத்தால்தான். அதேபோல் பெண் குழந்தைகள் பொதுவாக நிதானத்தைக் கடைப்பிடிப்பவர்களாக இருப்பதும் உணர்வு சார்ந்தவர்களாக இருப்பதும் அவர்கள் உடலில் சுரக்கும் சில ஹார்மோன்களின் காரணாமாகத்தான் .
இவைகளால் இருபாலாரின் கற்றல் போக்குகள், கற்றல் பாதைகள், கற்றலின் முறைகள் மாறுபடலாமேயன்றி அவர்களுடைய கற்றலின் திறன்கள் மாறுபட வாய்ப்புகள் மிகக் குறைவு. ஆகவே ஒரு வீட்டில் கற்றலுக்கான சூழ்நிலைகளை ஏற்படுத்தும்பொழுது அதில் பாகுபாடு ஏதுமின்றி, வெளிப்படையாகவோ அல்லது உள்நோக்கத்துடனோ ஒரு பாலாரை மேம்படுத்தியோ இழிவுபடுத்தியோ பேசுதலும் செயல்படுதலும் தவறு மட்டுமல்ல, அவர்களுடைய வாழ்க்கையின் மேம்பாட்டை பாதிக்க வாய்ப்புக்களுண்டு .
(தொடரும்)