விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு மற்றுமொரு தடைக்கல்?
பவள சங்கரி
சென்ற ஆண்டு 28 சணல் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 48 ஆலைகள் மூடப்பட்டுள்ளன. விவசாயப் பொருட்களிலிருந்து உற்பத்திப்பொருள் தயாரிப்புகளை நிறுத்தினால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை ஏற்படும். மக்கிப்போகும் சணல் உற்பத்தியை நிறுத்திவிட்டு பெட்ரோலியப் பொருட்களான நெமிலிப் (பாலிதின் பைகள்) பைகளுக்கு அரசு ஆதரவு தெரிவித்து நீர் பிடிப்பு ஆதாரங்களில் பாதிப்பு உண்டாக்கிவிடுமோ என்று சமூக ஆர்வலர்களின் கவலைக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? விவசாய வேலை வாய்ப்புகளிலும் பாதிப்பு ஏற்படும் என்பதும் மறுக்கவியலாது. வங்க முதல்வர் சகோதரி மம்தா பானர்ஜி அவர்கள் இதில் தலையிட்டு தக்க நடவடிக்கைகள் எடுப்பார் என்று நம்புவோமாக!