ரா.பார்த்தசாரதி

 

பெற்றோர்களே  பிள்ளைகளின் திருமணம்  தீர்மானிக்கப்பட்டதே

மகன் , மகளின் வாழ்க்கையும் சிறப்பாக  அமைந்ததே

நிலைமையறிந்து, குலமறிந்து, திருமணம் நிச்சயக்கப்பட்டதே

இன்றோ ஆணும், பெண்ணும்,பேசி திருமணம் முடிவடைந்ததே !

 

திருமணம்    என்பது  ஆயிரம்  காலத்துப்  பயிரா,

பழமை மாறாமல் காத்தவர்களின்  தவறா,

அக்கால திருமணம் பந்தத்தினால் ஏற்பட்டதே

இக்கால  திருமணம்  பணத்தினால் தீர்மானிக்கப்பட்டதே !

 

அன்பு, பாசம், தியாகம் இவற்றிற்கு  அர்த்தம்முண்டு

இன்று இவற்றிற்கு எல்லாம் ஓர்  அளவுண்டு

சேர்ந்து  வாழ்ந்தால்  கோடி நன்மை என சொல்வதுண்டு

இன்றோ   பிரிந்து   வாழ நினைப்பதுண்டு !

 

வாழ்வின் காலச்சக்கரம்  அன்று  உறுதியாயிருந்ததே

வாழ்க்கை  வாழ்வதற்கே என சொல்லப்பட்டதே

வாழ்க்கை அன்று  சொர்க்கமாய்  அமைந்ததே

இன்றோ வாழ்க்கை  நரகமாய்  மாறியதே !

 

பழமைப்பேசி  இளந்தலைமுறையினரை திருத்தமுடியுமா

புத்திமதி கூறினாலும், அவர்களால்  ஏற்றுக்கொள்ளமுடியுமா

நானே ராஜா என்று நினைப்பவர்களை  திருத்தமுடியுமா

அழிவு  பாதையில் செல்பவர்களை தடுக்கமுடியுமா !

 

உலகத்தோடு ஒட்டி வாழ்வதே  வாழ்வு

காலத்திற்கு ஏற்ப வாழ்வதே  இதற்கு தீர்வு

விட்டுக்கொடுத்து வாழ்வதில்தான் என்றும் நன்மை

இதனை மறந்து வாழ்ந்தால் வாழ்வே தனிமை !

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.