படக்கவிதைப் போட்டி – (105)
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?
ஷாமினி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (01.04.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.
பாசத் துணை…
அழுது பிள்ளை அடம்பிடிக்கும்,
அலைகள் மோதும் கடலினிலும்
விழுந்து குளிக்க விருப்புடனே
வில்லாய் வளைந்து சத்தமிடும்,
மெழுகாய் உருகித் தாயவளும்
மெல்ல நனைப்பாள் கால்களையே,
பழுது யேதும் இல்லாத
பாசத் துணையது தாய்தானே…!
-செண்பக ஜெகதீசன்…
கடலினும் பெரிது இவர்களின் அன்பு;
மலையினும் பெரிது பாட்டியின் பாசம்;
உலகில் உயர்ந்தது பேத்தியின் நேசம்;
அன்பு அணைப்பில் ஆண்டவனைப் பார்க்கிறேன் ;
ஆனந்தத்தின் எல்லையை இங்கு தான் பார்க்கிறேன்;
கடல் மகள் அலை வந்து , தாயின் காலை
தொட்டு வணங்கிப் போவதைப் பார்க்கிறேன்;
மகனையும், தாயையும், இணைக்கும்
அன்புப் பாலம் இந்தப் பேத்தி!
பேத்தி காலில் நீர் பட்டால் கூட வலிக்கும் என
தூக்கிப் பிடிக்கும் அருமைப் பாட்டி!
மழலையும் , தாய்மையும், அன்பாய் சேர்ந்து!
இறைவனின் வடிவாய் கண்டேன் இன்று!
கடலருகே நிற்பது ஆபத்தன்றோ!
நிற்பது இரண்டும் குழந்தையன்றோ !
வயதானால் பெரியவரும் குழந்தையன்றோ!
இருந்தாலும் அஞ்ச வேண்டாம்!
கடலும் நமக்கெல்லாம் அன்னையன்றோ !
அன்னை, பிள்ளைகளை வெறுப்பதுண்டோ !
அலையாய் வந்து தான் அடிப்பதுண்டோ!
சிப்பிக்குௗ் இருக்கட்டும் முத்து.
அழகாய் மகௗ் பெற்று
ஆசை தீர வௗர்க்கிறேன்
இன்பம் பொங்குதடி உன் முகம் பார்க்கையிலே-இன்று
ஈர மணலில் தனியே துள்ளி குதித்தாட
உன் மனம் ஏங்குவதை அறிவேனடி!
ஊரெல்லாம் நச்சுப் பாம்புகௗடி
என் செல்வமே, மொட்டென்றும் பாராமல் கொத்திப் பார்க்குதடி
ஏன் இந்த அவலம் தெரியவில்லை
ஐயம் மட்டும் நெஞ்சினின்று அகலவில்லை
ஒப்பவில்லை மனம் உனை தனியே விட
ஓடி விளையாட ஏற்ற இடமில்லை உனக்குத் தர.. அட
ஔவை தோற்றத்தின் அர்த்தம் இன்றுதான் புரிகிறதடி!
சிப்பிக்குௗ் முத்தைப் போல
சிறு மலரே, கைக்குள் ௗேயே இருந்துவிடடி
பகைவனை அறியும் பக்குவம் வரும் வரை..
சிறந்த நேரம்
சிங்காரச் சிட்டே., என் சிறு ரோஜா மொட்டே..
சில்லென்ற காற்றில் சிறகடிக்கும் அலைகள்
சின்னக்குயில் நீ பாதம் பதிக்கவே..
சிற்றாடை கட்டி என் சிந்தை மயக்கும் மலரே
சில காலம் சென்றபின் சிரமமாகும் இத்தருணங்கௗ்.
சிற்றறிவு குண்டு சில மனிதர்கள் தடை செய்வார்கள்
சிறகடித்து நீ பறக்க..
சிக்கியபின் கூண்டை விட்டு
சிரமப்பட்டு வெளியே வந்து
சிந்தையில் பட்டதை நீ செய்ய
சித்திரமே காலம் பலவாகும்..
சிலந்தியைப்போன்ற முயற்சியுடன்
சிங்கம் போன்ற துணிவுடன் இனி
சிகரம் தொடும் நாௗ் வரை
சிக்காது இத்தருணங்கௗ்…
சிறந்த நேரம் இதுவே., நீ துள்ளி விளையாட..
சிறந்த நேரம்
சிங்காரச் சிட்டே., என் சிறு ரோஜா மொட்டே..
சில்லென்ற காற்றில் சிறகடிக்கும் அலைகள்
சின்னக்குயில் நீ பாதம் பதிக்கவே..
சிற்றாடை கட்டி என் சிந்தை மயக்கும் மலரே
சில காலம் சென்றபின் சிரமமாகும் இத்தருணங்கௗ்.
சிற்றறிவு கொண்ட சில மனிதர்கள் தடை செய்வார்கள்
சிறகடித்து நீ பறக்க..
சிக்கியபின் கூண்டை விட்டு
சிரமப்பட்டு வெளியே வந்து
சிந்தையில் பட்டதை நீ செய்ய
சித்திரமே காலம் பலவாகும்..
சிலந்தியைப்போன்ற முயற்சியுடன்
சிங்கம் போன்ற துணிவுடன் இனி
சிகரம் தொடும் நாௗ் வரை
சிக்காது இத்தருணங்கௗ்…
சிறந்த நேரம் இதுவே., நீ துள்ளி விளையாட..
இரண்டு நாட்களாக இணைய இணைப்பு பழுபட்டதால், தாமதத்துக்கு மன்னிக்கவும்..
===================================================
தாயின் மகிழ்ச்சி
=============
பத்தியங்கள் பலயிருந்து பத்துமாதம்..
பக்குவமாய் வயிற்றில்சுமந்த அன்னைநான்..!
ஈன்றேடுத்த தாயெனக்கு இதைவிட..
வேறென்ன மகிழ்ச்சி இருக்குதம்மா..!
காலைப் பொழுதில் வேலைபலயிருந்தும்..
பிள்ளை மகிழ்ச்சியில் கொள்ளைசுகம்காண்பேன்..!
குடும்பபாரம் சுமந்தாலும் அன்னையெனக்கு..
குழந்தைப் பாசம்தனில் சுமைபலகுறையும்..!
ஆழ்ந்த வறுமையினால் உனையாள்..
ஆக்க நாளெல்லாம் எதிர்நீச்சலிடுவேன்..!
கள்ளச் சிரிப்பை மறைந்துரசிக்க..
கரைவராமல் கடலலை கண்டுமகிழும்..!
பெண்ணாகப் பிறந்தயென் பாக்கியமே..
எண்ணத்தில் நிறைந்திருக்கும் பெட்டகமே..!
ஆண்மை ஆதிக்கத்தில் அகப்படாமல்..
பெண்ணினம் தழைக்கப் பாடுபடு..!
வன்முறைபல தாண்டியுன் வாழ்வினிலே..
வழித்தடம்பதித்து வெற்றி பெறவேண்டுமம்மா..!
புண்ணியமே பலசெய்து பெற்றிடினும்..
பெண்ணியமே பெரிதென்று கொண்டுவிடு..!
பெண்சிசுவதைக் கொல்வதைத் தடுத்திடு..
பெண்மையே மேன்மையெனப் போற்றிடு..!
நானிலத்தில் பெண்ணை கேலிசெய்வோரை..
நாவறுக்கும் வாளாய் நீயெழுகவே..!
பலநாளும்தாலாட்டி பண்புடன் வளர்த்ததாலே..
உலகாளும் பெண்ணாக நீயொருநாள்வரவேணும்..!
நவிலுகின்ற நற்பொருளை நன்கறிந்து..
நவின்றுநாளும் பணிதுவக்க பணிகின்றேன்..!
வளர்த்தயுனை வாய்பிளந்து பார்க்கையில்..
களைப்பும் சோர்வும் களையிழக்கும்..!
கடல்நீரில் ஒருசேரநாம் கால்நனைக்கயென்..
கவலையெலாம் கரையுமம்மா உனைநினைக்க..!
வாய்மைக்கு எடுத்துக் காட்டும்நீதான்..
வாழ்க்கையின் வழிகாட்டியும் நீதான்..!
அன்னையெதை ஊட்டி வளர்த்தாளென..
ஆரு முனைக்கேட்டால் அன்பூட்டினாள்..
எனச்சொல்லு..!
ஆங்காரி
சி. ஜெயபாரதன், கனடா
பெற்ற தாயின் வாயைப் பார் !
எட்டியுள்ள கடலைப் பார் !
சிட்டு போன்ற
எளிய சிறுமியைப் பார் !
தாயின் வாய் சினம் காட்டுது !
கடலின் வாய்
விழுங்கப் பார்க்குது !
சேயின் மெய் துடிக்குது !
கை துடிக்குது !
உயிரென்ன வெள்ளரிக்காயா ?
பிள்ளை என்ன
கிள்ளுக் கீரையா ?
தவமிருந்து பெற்ற பிள்ளை
தவிக்குதடா !
அழுவாத பிள்ளை,
அடம் பிடிக்கா பிள்ளை
எழு பிறப்பிலும் உண்டோ ?
கடலில் போடப் போகும்
மடந்தை இவள்
தாயா ?
அல்லது பேயா ?
++++++++++++++