பெற்றோருக்கு…. !
பவள சங்கரி
இளைஞர்களின் தற்கொலை முயற்சிக்கு மன அழுத்தமே காரணம். 14 வயது முதல் 24 வயதுவரை உள்ள இளைஞர்களிடம் இந்தப்பிரச்சனை விசுவரூபம் எடுத்துள்ளது. 2013 – 14 இல் 15,000 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலைமாறி 2015 – 16 இல் கர்நாடகாவில் மட்டும் 54,000 என்ற எண்ணிக்கையைத் தாண்டிவிட்டது என்பது அதிர்ச்சியான செய்தி . ஆண்டிற்கு ஆண்டு இது அதிகரித்து வருகிறது. இளையோரின் மன அழுத்தத்தின் முக்கிய காரணியாக பெற்றோர்களின் அதீத எதிர்பார்ப்பும், வேலையின்மையும் இறுதியாக காதல் விவகாரமும் தான் என்கிறது இந்த ஆய்வறிக்கை. கர்நாடகாவில் ஆரோக்கியவாகினி என்ற அமைப்பு அரசினால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் இளைஞர்கள் தங்கள் மன அழுத்தம் குறித்து விவாதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிராமப்புறங்க்ளைவிட நகர்ப்புற இளைஞர்களுக்கே இந்தப் பிரச்சனை அதிகமாக உள்ளதாம். தமிழ்நாட்டிலும் இதுபோன்றதொரு அமைப்பு உடனடியாக ஏற்படுத்துவது அவசியம். பெற்றோர்கள் குழந்தைகளை அக்கறையுடன் அணுகி அவர்களின் மன நிலையை அறிந்து அதற்கேற்ற வகையில் அவர்களை வழிநடத்த வேண்டியது அவசியம். முக்கியமாக அதீத எதிர்பார்ப்பைக் குறைத்துக்கொண்டு, தேவையற்ற திணிப்பை தவிர்க்க வேண்டியது அவசியம்.