பிரான்ஸில் எம்.ஜி.ஆர். விழா – செய்திகள்

0

பிரான்சு எம்.ஜி.ஆர் பேரவை என்ற அமைப்பு சில ஆண்டுகளாகப் பாரீசில் இயங்கி வருகிறது. இத்தகைய அமைப்பு உலகில் வேறு எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை.  இந்த அமைப்பின் சார்பில் ”மனித புனிதர் எம்.ஜி.ஆர் 2011” என்ற தலைப்பில் விழா நடைபெற இருக்கிறது.

நாள் :  17.09.2011 சனிக்கிழமை.

நேரம் : காலை 10.00 மணி முதல் முற்பகல் 01 .00  மணி வரை எம்.ஜி.ஆர் அவர்களின் அரிய புகைப் படங்களின் கண்காட்சி நடைபெறும்.  மதியம் 2.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை விழா நடைபெறும்.

இடம் : SALLE DE LA LEGION  D’HONNEUR, 6 RUE DE LA LEGION D’HONNEUR, 93200 ST DENIS

தலைமை : திரு முருகு பத்மநாபன் (எம்;ஜி.ஆர் பேரவைத் தலைவர்) .

முன்னிலை : திருமதி காயத்ரி இஸார் குமார், திரு கன்யால்(இந்தியத் தூதரக அதிகார்கள்)

பேரா. பா. தசரதன், பேரா. பெஞ்சமின் லெபோ, திருவாளர்கள் அலன் ஆனந்தன், நஜீம், சுகுமாரன் முருகையன், தேவகுமாரன், புலவர் பன்னீர்செல்வம், தலிஞ்சன் முருகையா, பாரீஸ் பார்த்தசாரதி எனப் பலரும் உரை ஆற்றுகிறார்கள்.  பேரவைச் செயலர் திரு ஆனந்த ராமன் வரவேற்புரை நிகழ்த்தவுள்ளார்.

இவ்விழாவில் நகரசபைத் துணைத் தலைவர்கள் நால்வர் கலந்துகொள்கிறார்கள்.

திரைப்பட நகைச்சுவை நடிகர் திரு மயில்சாமி மற்றும் ‘இதயக் கனி’எம்.ஜி.ஆர் மாத இதழின் ஆசிரியர் திரு எஸ். விஜயன் ஆகியோர் சிறப்புரை வழங்கவுள்ளனர்.

முதுபெருங்கவிஞர், கவிச் சித்தர் கண. கபிலனார் கவி உரை வழங்குவார்.  தொடர்ந்து நடன இசை நிகழ்ச்சிகள் பல நடைபெற உள்ளன.  நன்றி உரை திரு முகமத் முஜாவித்.

நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் : புலவர் பொன்னரசு, திருமதி ஜெகதீஸ்வரி செல்வமணி.

வாய்ப்புள்ள அனைவரும் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பிக்க வல்லமை கேட்டுக்கொள்கிறது.

 

 

(தகவல் : பேரா. பெஞ்சமின் லெபோ)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *