கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

திருமால் கண்ணனாய் பிறந்து கோகுலத்தில் தாய்மடியில் தவழ்வதைக் கண்டு அம்பலவாணர் அம்பலமாய்(PUBLICகா) ஆசையில் காப்பிட(பிள்ளைக்கு காப்பு கட்ட) வந்தாராம்….கண்ணனுக்கு ஏக வருத்தம்….தன்னை பார்பதற்காக தங்கையை மதுரையில் தனியாக விட்டதோடல்லாமல், அன்னை யசோதை கண்களை யோக மாயையால் கஷ்டப்பட்டு கட்டி, எடுத்த அவதாரத்தை அம்பலவாணர் இப்படி அம்பலப் படுத்தி விட்டாரே ஆசையில்…. ஈஸா ‘’ஈஸனோடாயினும் ஆசை அறுமின்’’ ஓய்… என்பதாக வெண்பா…. (கருத்து -டோங்க்ரே மஹராஜ் பாகவதம்)

170816 - Rudrageetham -lr
170816 – Rudrageetham -lr

’’மாப்பிள்ளை டோயே!(பழைய சினிமா பாட்டு) மதுரைமீ னாளைவிட்(டு)-
ஆப்புள்ளைக்(கு)(ஆயர்தம் பிள்ளை) இப்படியா அம்பலமாய்(PUBLICகா) -காப்பிடுவீர்!:
-அப்பன் குதிருள்ளே இப்பத்தான் போனாராம்-
சுப்பன்போல்(அந்த பையன் பேர் சுப்பன் என்று வச்சுப்போம்) செய்தீர் சிவம்’’….கிரேசி மோகன்….!

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *