அவள் ஒரு பெண்

மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

image (1) 

 

 

 

 

 

 

 

 

 

எனக்குப் பரிசெதுவும் தருவ தில்லை

என்னினிய காதலி !

நாட்டுப் புறத்து நங்கை இல்லையென

நான் அறிவேன்.

என்றென்றும் அன்பை அள்ளித்

தருபவள் அவள்.

எனக்குப் பரிசு தரமாட்டாள்

என் காதலி !

தனிமையில் வாடினால் என்னைத்

தாலாட்டுவாள் அவள் !

பாசாங்கு செய்கிறாள் என்பார்

பக்கத்தில் இருப்பவர்.

அப்படி அவள் இல்லை என்று

அறிந்தவன் நான்.

தன்னை ஓர் ஆடவன் உற்று நோக்க

இடம் தராதவள் !

நான் அழுவதைப் பார்த்தால்

மனம் உடைவாள் !

பூரித்து போவாள் நானவளை

ஒருபோதும்

பிரிய மாட்டேன் என்றால் !

எனக்குப் பொறாமை உண்டாக்கத்

துணியாதவள்.

என்னைப் புரிந்து கொண்டவள்;

தன் காதலனை மட்டும்

என்றும் நேசிப்பவள்.

தன் காதலை, நேரத்தை எல்லாம்

தருவது எனக்குத் தான்  !

ஏனென்று கேட்காதே !

 

 

About சி.ஜெயபாரதன்

அணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியல் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா, கனடாவில் அனுபவம் பெற்று, இப்போது ஓய்வில் தமிழ் இலக்கிய படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறார். 1960ஆம் ஆண்டு முதல் இவரது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளிவந்துள்ளன. இவரது ஆக்க வினைகளுக்கு அணுசக்தி நூல் 1964இல் சென்னை பல்கலைக்கழகத்தின் மாநில முதற்பரிசு பெற்றது. கணினித் தமிழ்வலைப் பதிவுகள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த 15 ஆண்டுகளாக 800க்கும் மேற்பட்ட விஞ்ஞானக் கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் பற்பல அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்திமழை, நதியலை, வல்லமை போன்ற வலைத் தளங்களில் பல்லாண்டுகள் வந்துள்ளன. இவரது நீண்ட தமிழ் நாடகங்கள், மும்பையிலும், சென்னை கல்பாக்கத்திலும் அரங்கேறியுள்ளன. இதுவரை 27 நூல்கள் வெளிவந்துள்ளன: ஆக்க வினைகளுக்கு அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், அணுசக்தி, தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி, அணுவின் ஆற்றல், இந்திய விஞ்ஞான மேதைகள், சீதாயண நாடகம், சீதாயணம் படக்கதை, கீதாஞ்சலி, ஆபிரஹாம் லிங்கன், சாக்ரடிஸ், நெப்போலியன், ஜோன் ஆஃப் ஆர்க், முக்கோணக் கிளிகள் படக்கதை, கலீல் கிப்ரான் கவிதைகள், விண்வெளி வெற்றிகள், அணுமின்சக்தி பிரச்சனைகள், மெய்ப்பாடுகள், அணுசக்தியே இனி ஆதார சக்தி, நைல் நதி நாகரீகம், உலகிலே உன்னத பொறியியற் சாதனைகள், எழிலரசி கிளியோபாத்ரா, காதல் நாற்பது, உன்னத மனிதன், பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் (தொகுப்பு 1 & 2), அண்டவெளிப் பயணங்கள். Echo of Nature [English Translation of Environmental Poems (வைகைச்செல்வி வெளியீடு].

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க