தீபாவளி பலகாரம்!
பவள சங்கரி
தீபாவளி நெருங்குகிறது. கடைகளில் பலகாரம் வாங்குவோர் கவனம்! டெங்கு, விசக்காய்ச்சல்கள் என நோய்கள் தீவிரமாகியுள்ள இந்த சூழ்நிலையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்!
பதிவு பெற்ற நிறுவனங்களிடமிருந்து மட்டுமே இனிப்பு வகைகள் வாங்கவேண்டும் என்று உணவு பாதுகாப்புத் துறை அறிவுரை! தரமான மூலப்பொருட்களைக்கொண்டு சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட வேண்டும். கலப்பட பொருட்கள், அதிகமான நிறமிகள் உபயோகிக்கக்கூடாது. பெயர், தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதியாகும் தேதி, தயாரிப்பாளர் பெயர் போன்றவைகள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். தயாரிக்கும் இடம், விற்கும் இடம் சுத்தமாக ஈ, கொசு, பூச்சிகள் வராமல் காக்கப்பட வேண்டும். இது பற்றி புகார் இருந்தால் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அல்லது மாநில உணவு பாதுகாப்புத் துறை அலுவலகத்திற்கோ புகார் அளிக்கலாம்.