‘எந்திரன்’ முன்னோட்டம் வெளியீடு
‘எந்திரன்’ படத்தின் முன்னோட்டம் (டிரெய்லர்), 2010 செப்.11 அன்று வெளியிடப்பட்டது. இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் அதிகப் பொருட்செலவில் தயாரிக்கும் படம் ‘எந்திரன்’. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக அழகி ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடித்துள்ளனர். ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கி உள்ளார். இந்தப் படத்தின் பாடல்கள், 2010 ஆகஸ்டு மாதம் மலேசியாவில் வெளியிடப்பட்டது. இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் 2010 செப்.11 அன்று நடந்தது.
சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன், ரஜினிகாந்த், ஷங்கர் இணைந்து முன்னோட்டத்தை வெளியிட்டார்கள். விழாவில் ரஜினி, இயக்குநர் ஷங்கர், கவிஞர் வைரமுத்து, நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், சவுண்ட் என்ஜினீயர் ரசூல் பூக்குட்டி, இயக்குநர்கள் பாக்யராஜ், கே.எஸ்.ரவிகுமார், பார்த்திபன், தரணி, லிங்குசாமி, ஹரி, சுந்தர்.சி, சேரன், நடிகர்கள் விவேக், ஆர்யா, லாரன்ஸ், தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராம.நாராயணன், பெப்சி தலைவர் வி.சி.குகநாதன், விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கலைப்புலி ஜி.சேகரன், திரையரங்க அதிபர் அபிராமி ராமநாதன், தென்சென்னை மாவட்டத் தி.மு.க செயலாளரும், தயாரிப்பாளருமான அன்பழகன் ஆகியோர் பேசினார்கள்.
ரஜினி மனைவி லதா, சவுந்தர்யா, அஸ்வின், ஐஸ்வர்யா தனுஷ், நடிகர்கள் கரண், அருண் விஜய், சிபிராஜ், ஷாம், நகுலன், கிருஷ்ணா, இயக்குநர் கிச்சா, தயாரிப்பாளர்கள் சத்யஜோதி தியாகராஜன், எடிட்டர் மோகன், அம்மா கிரியேசன்ஸ் சிவா, அய்யப்பன், சிவஸ்ரீ சீனிவாசன், எடிட்டர் ஆண்டனி உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியைக் கருணாஸ் தொகுத்து வழங்கினார்.