பிறந்தநாள் நினைவு நலத்திட்டங்கள்
ஜெ.சுத்தானந்தன் பிறந்த நாள் விழா
ரூ. 10.5 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் கல்லூரி தாளாளா திருமதி . வசந்தா சுத்தானந்தன் வழங்கினார்.
செங்குந்தர் கல்வி நிறுவனங்களின் முன்னாள் தாளாளர் மறைந்த ஜெ.சுத்தானந்தன் பிறந்த நாள் விழாவையொட்டி ரூ. 10.5 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அவற்றை கல்லூரித் தாளாளர் திருமதி. வசந்தா சுத்தானந்தன் வழங்கினார்..
சிவத்திரு. ஜெ. சுத்தானந்தன் பிறந்த நாள் விழா
செங்குந்தர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் மறைந்த ஜெ.சுத்தானந்தனின் 68-வது பிறந்த நாள் விழா, இளைஞர் எழுச்சி தினம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, ரத்த தான முகாம் ஆகியவைகள் சென்னிமலை எம்.பி.நாச்சிமுத்து எம்.ஜெகநாதன் பொறியியற் கல்லூரியில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு எம்.பி.நாச்சிமுத்து எம். ஜெகநாதன் பொறியியல் கல்லூரித் தாளாளர் திருமதி.வசந்தா சுத்தானந்தன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக ஈரோடு பாரதி வித்யாபவன் தாளாளர் டாக்டர் எல். எம். இராமகிருஷ்ணன், வேளாளர் நிறுவனங்களின் தாளாளர் எஸ். டி. சந்திரசேகர், மக்கள் சிந்தனை பேரவை தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
நலத்திட்ட உதவிகள்
அதைத் தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. எம்.பி.நாச்சிமுத்து, எம். ஜெதநாதன் பொறியியல் கல்லூரிக் கட்டிடவியல் துறை சார்பில் மாணவ – மாணவிகளுக்கு குடிநீர் குழாய் வடிகால் கட்டமைப்பு மற்றும் கான்கிரீட் பலகை அமைக்க ரொக்கப் பணம், கணிணி அறிவியல் துறை சார்பில் சென்னிமலை உதயம் குழந்தைகள் காப்பகத்திற்கு போர்வையும், மின்னியல் மற்றும் மின்னனுவியல் துறை சார்பில் ஈரோடு கொங்கு அறிவாலயத்திற்கு உணவிற்கான உதவித் தொகையும் வழங்கப்பட்டன. தொடா;ந்து மின்னனுவியல் மற்றும் தொலைத் தொடர்பியல் துறை சார்பில் மாணவ – மாணவிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம், இயந்திரவியல் துறை சார்பில் ஈரோடு வீர சிவாஜி சமூக நலச் சங்கத்துக்கு உணவு மற்றும் உணவுக்கான ரொக்கப்பணம், தகவல் தொழில் நுட்பம் மற்றும் கணிணி பயன்பாட்டு துறை சார்பில் ஏழை மாணவ- மாணவிகளுக்கு தேர்வு கட்டணம் மற்றும் அறிவியல் மானுடவியல் துறை மற்றும் நூலகம் சார்பில் சென்னிமலை பாரதியார் குழந்தைகள் காப்பகத்திற்கு பொருட்கள், மேலாண்மை துறை சார்பில் துப்புரவு பணியாளார்களுக்கு ஆடை, என்.எஸ். சார்பில் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து சுத்தானந்தன் குறித்த பாட்டு, கவிதை மற்றும் கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ – மாணவிகளுக்கு பரிசுகள் என மொத்தம் சுமார் 200-கு;கும் மேற்பட்டவர்களுக்கு ரூ. 10.5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நலத்திட்ட உதவிகளை எம்.பி. நாச்சிமுத்து எம். ஜெகநாதன் பொறியியற் கல்லூரியின் தாளாளர் திருமதி. வசந்தா சுத்தானந்தன் வழங்கினார்
கண்காட்சி :முன்னதாக சுத்தானந்தன் குறித்த புகைப்பட கண்காட்சியை மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் ஸ்டாலின் குணசேகரன் திறந்து வைத்தார். கண்காட்சியில் சுத்தானந்ததின் சிறுவயது புகைப்படங்கள், அவர் குறித்த கவிதைகள், மாணவ – மாணவிகள் கோலத்தால் வரைந்த சுத்தானந்தனின் படம் ஆகியவை கண்காட்சியில் வைக்கப்பட்டு இருந்தன. அதை மாணவ – மாணவிகள் ஆர்வமுடன் கண்டு களித்தனர். பிறகு மாலையில் ஜெ.சுத்தானந்தனின் புகழுக்கு பெரிதும் புகழ் சேர்ப்பது சமுதாயப்பணியா அல்லது கல்விப்பணியா? என்ற தலைப்பில் புலவர் தியாகசீலன் தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. இந்த விழாவில் தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத் துணைச் செயலாளர் ஆர்.பாலசுப்பிரமணியன், ஈரோடு செங்குந்த மகாஜன சங்கத் துணைத் தலைவர் எம்.பி. தெய்வசிகாமணி பொறிஞர் சதீஸ் மற்றும் மாணவ – மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கல்லூரி முதல்வர் கே. பழனிச்சாமி வரவேற்றார். முடிவில் கணிதத்துறை பேராசிரியர் செந்தில்வேலவன் நன்றி கூற விழா இனிது நிறைவடைந்தது.
—
மகிழ்ச்சி தரும் செய்தி. திரு. சுத்தானந்தனை பற்றிய சுருக்கமான உரை ஒன்றை, புகழுரைகள் அதிகம் இல்லாமல், நற்செய்திகள் அதிகம் இருக்குமாறு, ‘பாமர கீர்த்தி ~ பவளசங்கரி’ என்ற இழையில், மின் தமிழில் பதிவு செய்யலாம் என்று ஆலோசனை.