செய்திகள்பொது

பஜன் சாம்ராட் – தொலைக்காட்சி நிகழ்ச்சி – செய்திகள்

இசை என்பது தெய்வீகமானது.  அதுவும் பக்திப் பரசவத்துடன் பாடப்படும் பஜன்களுக்கு இசையுலகில் தனிச்சிறப்பு உள்ளது.  “நாம சங்கீர்த்தனம்” நிகழ்த்தப்படும் போது, மெய் சிலிர்த்து பரம்பொருளின் அருளை உணர முடிகிறது.

ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சி தயாரிக்கும் “பஜன் சாம்ராட்”, தென்னிந்தியாவில் உள்ள மிகச்சிறந்த பஜன் குழுவை தேர்ந்தெடுத்து அவர்களை உற்சாகப்படுத்த வரவிருக்கும் ஒரு அரிய நிகழ்ச்சி.  இப்போட்டியில் வெற்றி பெரும் பஜன் குழுவிற்கு “பஜன் சாம்ராட்” என்ற பட்டம் வழங்கி கவுரவிக்கப்படும்.

நீங்கள் ஏதாவது ஒரு பஜன் குழுவைச் சார்ந்தவராகவும் உங்களின் வயது 15 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.  சென்னை, மதுரை, தஞ்சாவூர், கோயம்புத்தூர், பெங்களூரு மற்றும் ஹூப்ளி ஆகிய நகரங்களில் இதற்கான முதற்கட்ட தேர்வு நடைபெறும்.

போட்டிக்கான விண்ணப்பப் படிவத்தை www.srisankaratv.net என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.  பூர்த்தி செய்த விண்ணப்பங்களை இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பலாம் அல்லது தேர்வு மையங்களுக்கும் நேரடியாக வந்து பதிவு செய்துகொள்ளலாம்.

பஜன் சாம்ராட் நிகழ்ச்சி பற்றிய கூடுதல் தகவல்களுக்கு 044-43201122 என்ற எண்ணை அழைக்கலாம்.

Print Friendly, PDF & Email
Download PDF
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க