முதன்மைக் கல்வி அலுவலரிடம் வேண்டுகோள்…
—————————————————————————————————————————–
ஈரோடு மாவட்டப் பள்ளி ஆசிரியர்கள் – மாணவர்கள் புத்தகத்திருவிழாவை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள ஆவன செய்யுமாறு முதன்மைக் கல்வி அலுவலரிடம் வேண்டுகோள்…
—————————————————————————————————————————–
ஈரோடு மாவட்டத்திற்குட்பட்ட அரசு மற்றும் தனியார் கல்வி நிலையங்களில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் , பயிலும் மாணவர்களும் , ஈரோடு புத்தகத் திருவிழாவை முழுமையாகப் பயன்படுத்தும் விதத்தில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென்று முதன்மைக் கல்வி அலுவலரிடத்தில் மக்கள் சிந்தனைப் பேரவை வேண்டுகோள் வைத்தது.
புத்தகத் திருவிழா நடைபெறுவதையொட்டி பள்ளிகளில் நடைபெறும் வழிபாட்டுக் கூட்டங்கள் மற்றும் வகுப்பறைகளில் பாடப் புத்தகங்களுடன் பொதுப் புத்தகங்களையும் வாசிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் விதத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப் பட வேண்டுமென்றும் , பள்ளி மாணவர்களை புத்தகத் திருவிழாவிற்கு அழைத்து வந்து அவர்களின் வளர்ச்சிக்கு உதவும் நல்ல புத்தகங்களை வாங்கி அவரவர் இல்லங்களில் சிறு நூலகங்கள் அமைக்க ஊக்கப்படுத்தப்பட வேண்டுமென்றும் பேரவையின் சார்பில் முதன்மைக் கல்வி அலுவலரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இதற்கான வேண்டுகோள் கடிதத்தை பேரவையின் தலைவர் த. ஸ்டாலின் குணசேகரன் முதன்மைக் கல்வி அலுவலர் ஆர். பாலமுரளி அவர்களிடம் வழங்கினார்.
பேரவையின் பணிக்குழு உறுப்பினர்களாக விளங்கும் முன்னாள் தலைமையாசிரியர்கள் கவுந்தப்பாடி எஸ். சண்முகம் , தளவாய்பேட்டை பி.ஆர். செல்வராஜ் , சிவகிரி சி.ஆறுமுகம் , ஈரோடு டி. கணேசன் ஆகியோர் உடனிருந்தனர்.