அம்பத்தூர் நகரில் “மக்கள் விருது” வழங்கு விழா – செய்திகள்
அம்பத்தூர் நகரில் கடந்த 25.09.2011 அன்று மாலையில் திருமால் திருமண மண்டபத்தில், சவுத் இந்தியன் போஸ்ட் வர இதழ் மற்றும் இலக்குவனார் இலக்கியபேரவை இணைந்து திரு செம்பை சேவியர் தொகுத்து இந்தியன் போஸ்ட் பதிப்பகம் வழங்கிய “முத்துக்கள் நூறு” நூல் வெளியிட்டு விழா மற்றும் அம்பத்தூர் பகுதியில் சுற்றுவட்டாராத்தில் ஆறு மாமணிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு “மக்கள் விருது – 2011” வழங்கும் விழா மிகவும் சிறப்பாக திரைப்பட இயக்குனர் திரு எஸ்.பி. முத்துராமன் மற்றும் அம்பத்தூர் சேது பாஸ்கரா பள்ளித் தாளாளர் டாக்டர். சேதுகுமணன் அவர்களும் விழாவினை சிறப்பித்து நூல் வெளியீட்டும் வாழ்த்துரையும் வழங்கினார்கள்.
இதில் திரு.எஸ்.பி. முத்துராமன் அவர்கள் பேசிய கருத்துக்கள் அனைத்தும் மிகவும் சிறப்பாக இருந்தது. இதில் ஒருமுறை கூட எந்த ஒரு தன்னுடைய வெற்றிக்கு காரணம் “தான்” என்று குறிப்பிடாதது கவனிக்கத்தக்கது. எங்களுடைய ’யுனிட்’ தான் இதுவரை நான் இயக்கிய எழுபது படங்களுக்கும் உறுதுணையாக இருந்து வெற்றியை தந்தது என்று சொல்லியது அவரது மற்றவர்களை மதிக்கும் பாணி அனைவரையும் கவர்ந்தது. மேலும் என்னதான் அலுவலக பணிகள் இருந்தபோதும், நமது குடும்பத்தையும் கவனிக்க வேண்டும் அவர்களுக்காகவும் கொஞ்சம் நேரம் ஒதுக்க வேண்டும், பொது நல சேவையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் , அலுவலகம்…. அலுவலகம்,,, என்று ஓடிகொண்டிருப்பவர்களுக்கும் தனது வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு நிகழ்வினைக் கூறி, வந்திருந்த அனைவரையும் கொஞ்சம் யோசிக்க வைத்து மனங்கலங்க வைத்தது அவரது உரை என்றால் மிகையாகாது.
முன்பெல்லாம் கதைக்காக நடிகர் நடிகைகளை தேர்ந்தெடுப்போம் இப்போது நடிகர் நடிகைகளுக்காக கதைகளை எழுத வேண்டி உள்ளது என்று தனது ஆதங்கத்தையும் வெளிபடுத்தத் தயங்க வில்லை. வெளி நாடுகளுக்குக் குறைந்த பட்ச உதவியாளர்களை மட்டுமே அழைத்துச்செல்ல முடியும் என்றும், அப்படி படபிடிப்புகளுக்கு செல்லும் போது சூப்பர் ஸ்டார் அவர்கள் ஈகோ பார்க்காமல் அணைத்து வேலைகளிலும் பங்கு கொண்டு படத்தின் ஹீரோ என்ற எண்ணம் இல்லாமல் ஒன்றாக நன்றாக பழகுவார் என்ற அபூர்வச் செய்தி ஒன்றையும் சொல்லி, இன்று சூப்பர் ஸ்டார்-ன் வளர்ச்சிக்கு, அவரது வெற்றிக்கு அவரது அயராத உழைப்பு மட்டுமே முக்கிய காரணம் என்று சொல்லியது இத்தனை நாட்கள் திரைப்பட உலகில் நல்ல பெயருடன் இருப்பதற்கான காரணம் இவரது அயராத உழைப்பும் உடனிருப்பவர்களை பண்பான அன்புடன் அரவணைத்துச் செல்வதும்தான் என்ற உண்மையை சொல்லாமல் சொல்லியது இவரது உரை.
நிகழ்ச்சி புலவர் தேவதாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது என்றாலும் அவர் தலைமைப் பொறுப்பில் ஓரிடத்தில் இருந்துவிடாமல் நிகழ்ச்சி அனைத்தையும் தொகுத்து வழங்கியது பெருமையாக, வித்தியாசமாக இருந்தது. நிகழ்ச்சியினை சவுத் இந்தியன் போஸ்ட் நிறுவனர் திரு. தரும அசோகன் அவர்கள் அருகில் இருந்து இயக்கியது இன்னும் பெருமையாக இருந்தது!