கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
புலிதாங்கி பாலர், எலிதாங்கி வேழர்,
கலிதாங்கி கந்தர் குலாவும்- லலிதாங்கி
ராணியே,ரக்ஷி: ரஹஸ்ய சினேகிதி
வாநீயுன் வாசலில் வீடு….!
”த்யான த்யாத்ரு த்யேய ரூபி”
—————————————–
எண்ணும் தொழிலவள், எண்ணிலா எண்ணமவள்
எண்ணுவோர்க்(கு) ஏற்ற எழுச்சியவள் -எண்ணிடத்
தின்னும் பசியவள், தீராத தாகமவள்,
உண்ணா முலையவளை உண்…கிரேசி மோகன்….!