181010 Pulaka Bhushanam Ashrayanti-wcol 24×32 icam lr

வேதம் படித்தென்ன , வேதாந்தம் கற்றென்ன
சீதரன் பாதம் சொடுக்கெடுப்போள் -பாதம்
பணிந்திடு மானுடா, பாரதன்பின் உன்னுள்
கனிந்திடும்காண் முத்திக் கனி”….!

“ஆடி வெள்ளியில் தேடிவரும் தங்கமுனை
மூடி உறங்காதே முன்கதவை -ஏடி !
எழுந்தேலோ ரெம்பாவாய் ,எம்பிரான் பள்ளி
விழுந்தாளை வாழ்த்தி வணங்கு”….!

’’முனிபிருகு வாரிசே மூவா முகுந்தன்
பணிகாத்தல் பக்க பலமே -அணிபொற்
சரமே அவன்மார் சரோஜமே தாமோ
தரனுகக்கும் தாயே துதிப்பு “.!

“பொன்னாத்தா, தாமரைப் பூவாத்தா, தாங்கிடும்
மண்ணாத்தா, பின்வந்த சின்னாத்தா, -பண்ணாத்தான்,
நன்னாத்தான் பாடிய, நாச்சியார் காதலுக்கு
கண்ணாத்தா வாயிருந்து காப்பு”….!

உத்தம பத்தினியின் உச்சந் தலைவகிட்டில்
பத்தும் செய்யா பணமுடிப்பில் -சுத்தமாய்
சாணத் தெளிப்பில்ஸ்ரீ சூர்ண நுதற்பிறையில்
காணலாம் பொன்மகளின் கால்….!

“வண்ணான் சொல்ல வரித்த மனையிவளை
சொன்னான் வனத்திற்கு செல்லென்று -பின்னாளில்
தந்தை கதைசொல்ல தந்தாள் இருபிள்ளை
விந்தை இவள்செய் விதி”….

’’கைடபனைக் கொன்றவன், கார்முகிலாய் சேடன்மேல்
மெய்படரச் சாய்ந்தவன்மேல் மின்னலாய் -மையடர்ந்த
பங்கயக் கண்களால் பார்த்தது போதுமென்மேல்
திங்கள் விழியைத் திருப்பு’’…கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.