சூரியன் பின் தொடர்வேன்  !

மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
தமிழாக்கம் : சிஜெயபாரதன்கனடா
++++++++++++++++


ஒருநாள் தெரியும் உன் கண்ணுக்கு
ஓடிப் போனேன் நானென்று !
ஆனால்
நாளை மழை தூவலாம் !
நானும் சூரியன் பின் போகலாம் !

ஒருநாள் அறிவாய் நீ
உனக்கு ஏற்றவன் நானென்று !
ஆனால்
நாளை மழை தூவலாம் !
நானும் சூரியன் பின் போகலாம் !

நேரம் வந்து விட்டது,
ஆருயிர்க் காதலி !
பிரிய வேண்டும் நானும் !
இறுதியாய் காதலி ஒருத்தியை நான்
இழந்து போவதை
அறிவாய் நீயும் முடிவில் !

ஒருநாள் தெரியும் உன் கண்ணுக்கு
ஓடிப் போனேன் நானென்று !
ஆனால்
நாளை மழை தூவலாம் !
நானும் சூரியன் பின் போகலாம் !

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க