கவிதைகள்மரபுக் கவிதைகள்

முப்பெரும் தேவியர்

(வஞ்சித்துறை )

மலைமகள்

ஆதியாம் முதல்
பாதியாம் இவள்
மீதியாம்    சிவம்
தூதியாம்   பணி!

அலைமகள்

நாரணன்  மலர்
தாரணம்   இவள்
காரணம்   அரி
வாரணம்  அணி

கலைமகள்

ஞானமும்  அவள்
கானமும்    இதழ்
மோனமும்  சுடர்
தானமும்     இனி

கல்வியும் தரும்
செல்வமே வரம்
வெல்லென உரம்
சொல்லிட  வரும்

அன்னையின் புகழ்
முன்னையின்  கழல்
கொன்னையை  விடும்
சென்னையைத் தரும்

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க