பொறித்துப் படி
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
எத்தனைக் கொடுமையிது எத்தனைக் கொடுமையிது இத்தருண மிங்கே
அத்தனைக் கடுமையிது அத்தனைக் கடுமையிது முத்தமிழ ணங்கே!
இத்தனைக் காயமுடன் இம்மகள் துடித்தழுது இவ்வலியு மோடு
வத்தனைக் காய்வந்து பலியாகி கிடக்கிறாள் பரிகாச மோவிது ?
பெண்ணுக்கு சீர்மதிப்பும் சிதறாத சிறப்பும் தருவதுதான் ஈன்ற
மண்ணுக்கு அழகாகும் மறையாதப் புகழாகு மெனத்தெரியா மலே
கண்ணுக்கு இழுக்கும் கசையடி வழக்கும் காணநாற்சந் தியில்
இண்டனமா! இதற்கும் மேலெழு ந்தாரினி எள்ளிநகை யாடவோ
குயிலாய்ப் பாடிவரும் பறவையை பருந்துகள் உரித்து ருசியாற
மயிலாய்ப் பரதமிட மேடையில் வருவதை குறித்து பசியாற
பயிலாய்ப் பைந்தமி ழாலினுடை கண்ணகி பதிவிர தையான
உயிரும் குலமும் இனமும் இனியும் கற்புடன் வாழுமோ
அன்னைக்கு தங்கைக்கு தமக்கைக்கு தாரமாய் வந்துள மனைக்கும்
இன்றைக்கு மகனுக்கு மனைவியாய் வந்திடும் குலவிளக் கிற்கும்
என்றைக்கோ இந்நிலை ஏற்பட்டிருப்பின் ஆதாரம் கேட்டுநீ பார்ப்பாய்
வன்மைக்கு பலியாகி இன்மைக்குள் நீமட்டும் அகந்தை யோடு
தவறிழைத்தால் திருந்தவே தப்புசெயின் வருந்தவே இனியும் வாழ்வில்
உபரியானவை வந்தபோது உணர்ந்து தெளிந்து அறமும் கண்டே
கவரிமானினக் கட்டுப்பாடு மறந்து போனதில் தட்டுப்பா டுமனச்
சுவரினில் குறளும் அவ்வையின் அகச்சூடி பொறித்துப் படி