கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
சேதாரம் மேனிக்கே சாவில்லை ஆன்மனுக்கு
ஆதாரம் விஷ்ணு அவதாரர், -ஸ்ரீதாரர் (ஸ்ரீதேவியைத் தரித்தவர்)
வேகாது, தண்ணீரில் வீழ்ந்தும் நனையாது
சாகாத அவ்வுணர்வே சத்து….!
சத்துக்கு ஆனந்தம் சித்தின் விளையாட்டு
அத்தனையும் வேடிக்கை ஆகப்பார் -புத்தி
மனமுள்ளம் நெஞ்சென்ற மாயங்கள் நால்வர்
உனையுண்ணத் தூக்கும் உறவு….!
உறவும் பகையும் துறவும் தெளிவும்
வரவு செலவாகும் வாழ்க்கை -பறவை
ஒருகூடு விட்டு மறுகூடு போகும்
பெறுவீடு காணப் பயன்….!
பயனற்ற பாண்டம் பழுதாக மீண்டும்
வியனுலகை விட்டேக வேண்டும் -அயனோ
அரனோ, அரியோ அவதாரம் வந்தும்
மரணத்தில் தானே முடிவு…!
முடிவற்ற ஆசை முதலுக்கே மோசம்
வெடிவைத்து வந்திடுமா வானம் -படியற்ற
சொர்கத்தைக் காண செடியேறு கின்றாயே
தர்கத்தைத் தாண்டல் தவம்….கிரேசி மோகன்….!
I came to know that Sri Rengachari beloved father of our Crazy Mohan and felt sorry. Our deep condolances ! – Pulavar Ramamoorthy (now at Phoenix)