அந்த வருடம், புதிய வருடம்

சத்தியமணி

வருவது யாரோ??…புது வருடமா!!
தருவது தானோ ?? இனிய வரமா!!
முகங்களைப் பார்த்து முறுவல் பெறுமா?
உறவுகள் கூடி விருந்து தருமா?

எந்நேரமும் வாட்ஸ்அப் வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
எப்போதுமே ஃபேஸ்புக் ஃபேஸ்புக் ஃபேஸ்புக்
இல்லையென்றால் ச்சேட்டிங் ச்சேட்டிங் ச்சேட்டிங்
மிச்சமெல்லாம் ஸ்லிப்பிங் ஸ்லிப்பிங் ஸ்லிப்பிங்
தங்க நேரம் வீணாகிக் கழிகின்றதே
வாழ்வு வெறும் வயதாகி வளர்கின்றதே… (வருவது யாரோ?)

தாயுடன் பாட நேரமில்லையா?
தந்தையுடன் பேச வார்த்தையில்லையா?
உறவுகள் ஒன்றாய்க் கூடவில்லையே?
நனவுகள் நட்டம் பார்க்கவில்லையே?
இந்த வருத்தம் நீக்கிடுமோ
அந்த வருடம் புதிய வருடம் (வருவது யாரோ?)

அறிவினில் பெற்றது அதையும் மறந்தோம்
பிரிவினில் விட்டது எதையும் தொலைத்தோம்
அனுபவம் கொடுத்ததை எங்கு நினைத்தோம்
அதற்கும் மேலே தனித்துத் தவிர்த்தோம்
இந்த வருத்தம் நீக்கிடுமோ
அந்த வருடம் புதிய வருடம் (வருவது யாரோ?)

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *