யானையைக் காட்டி, பிச்சை எடுக்கிறேன்

0

keetru.com5 ஆண்டுகளுக்கு முன்பு செல்லப் பிராணியை வளர்க்கலாம் என்று ஒரு ஆட்டுக் குட்டியை வாங்கி, வளர்க்க ஆரம்பித்தேன். பார்ப்பதற்கு அழகான இளம் ஆட்டுக் குட்டியாக அது இருந்தது. அலுவலக வேலைகள் முடிந்ததும் அந்தக் குட்டியோடுதான் எனது நேரமெல்லாம். நண்பர்கள் குட்டியின் அழகில் மயங்கி, அதற்குத் தேவைப்படும் உணவை வழங்கினார்கள்.

அந்த ஆட்டுக் குட்டியை வளர்ப்பதில் நான் பெரும் மகிழ்வடைந்ததற்குக் காரணம், அது அந்தத் தெருவில் இருந்த குழந்தைகளுக்கு – பொம்மை வாங்கித் தர முடியாத பெற்றோர்களுக்கு – தேவைப்படுகிற விளையாட்டுப் பொருளாக மாறியதுதான். அவர்கள் தங்களது குழந்தைகளை இந்த ஆட்டுக் குட்டியின் முதுகில் உப்பு மூட்டையாக ஏற்றி விளையாட்டு காட்டினார்கள். ஆட்டுக் குட்டி, உள்ளம் நிறைந்த‌ மகிழ்ச்சியோடு அந்தக் குழந்தைகளுடன் விளையாடியது. நாளுக்கு நாள் ஆட்டுக் குட்டியைத் தேடி வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமானது. அதற்கு உணவளித்த இன்னும் சில நண்பர்கள் இருந்தபோதிலும், எனக்கான அடையாளமாக அந்த ஆட்டுக் குட்டி மாறியது. அதன் பெயரிலேயே என்னை அழைத்தார்கள்.

எனக்குத் திருமணம் ஆகி, எனக்கு என்று ஒரு குழந்தை பிறந்த பின்பும், நான் ஆட்டுக் குட்டியையே கொஞ்சிக்கொண்டு, அதனுடனேயே நேரத்தைச் செலவழித்துக்கொண்டிருந்தேன்.

நாட்கள் போனது தெரியவில்லை. கூடவே இருந்ததால் எனக்குத்தான் அதன் வளர்ச்சி தெரியவில்லை; குட்டியாகவே நினைத்துக்கொண்டிருந்தேன். திடீரென ஒருநாள் எனது வீட்டின் உரிமையாளர், ‘வீட்டில் யானையை எல்லாம் வளர்க்க அனுமதிக்க மாட்டேன், வேறு வீடு பாருங்கள்’ என்று சொல்லிவிட்டார். அப்போதுதான் தெரிந்தது, நான் வளர்த்தது ஆட்டுக் குட்டி அல்ல; யானைக் குட்டி என்று.

இப்போது யானையோடு தெருவில் நிற்கிறேன். அதற்கு ஒரு பெரிய வீடு வேண்டும். கம்பீரமாக அந்தத் தெருவில் விளையாடிய யானை, இப்போது படுத்துக் கிடக்கிறது. வேறு யாரிடமாவது விட்டுவிடலாம் என்றால், அவர்கள் நம்மைப் போல் பார்த்துக் கொள்வார்களா என்று அச்சம் வருகிறது. என்ன செய்வது வளர்த்த பாசம்!! இப்போது யானை செய்த உதவிகளைச் சொல்லி, யானையைக் காட்டி நான் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறேன். கீற்று (www.keetru.com) என்று சொன்னால், உங்களுக்குக்கூட அந்த யானையை நினைவுக்கு வரக்கூடும். கொஞ்சம் உதவுங்கள், உங்கள் குழந்தைகளுக்கும் தேவையான பொருளாக அந்த யானை இருக்கும்.

உதவ விரும்புவர்களுக்கு…

ஐசிஐசிஐ வங்கிக் கணக்கு எண்: 603801511669
கணக்கு வைத்திருப்பவர் பெயர்: இரமேஷ்
வங்கிக் கிளை: அண்ணா சாலை, சென்னை
IFSC Code / MICR Code: ICIC0006038 / 600229017

Credit card மூலமாக நன்கொடை அளிக்க விரும்புபவர்கள், paypal-ஐ (www.keetru.com/index.php) பயன்படுத்தவும்.

Cheque/DD அனுப்ப வேண்டிய முகவரி:
Ramesh,
22/34, Saraswathi Nagar 5th street,
Adambakkam
Chennai – 88

நன்கொடை அனுப்பியபின் தங்களது பெயர், அனுப்பிய தொகை குறித்து editor@keetru.comக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பவும்.

என்றும் அன்புடன்
கீற்று நந்தன்.
கைப்பேசி: 99400 97994

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *