2019 ஜூலை 2இல் நிகழ்ந்த முழுச் சூரிய கிரகணமும் கலிஃபோர்னியாவில் ஜூலை 7ஆம் நாள் நேர்ந்த நிலநடுக்கமும்

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P. Eng. Nuclear.
++++++++++++++++++++++
- https://mail.google.com/mail/
u/0/#inbox/ PFMfcgxwChcgJbFQjpxXjsmVRSPZzC MM - https://scienceofcycles.com/
update-2019-full-solar- eclipse-and-earth-changing- events/ - https://pmdvod.
nationalgeographic.com/NG_ Video/776/831/1005835843746_ 1500669678490_1005846083907_ mp4_video_1024x576_1632000_ primary_audio_eng_3.mp4 - https://scienceofcycles.com/
big-earthquakes-might-make- sea-level-rise-worse/ - https://www.travelandleisure.
com/trip-ideas/space- astronomy/next-total-solar- eclipse-july-2019 - https://www.sciencenews.org/
article/2019-total-solar- eclipse-south-americ
++++++++++++++++++++++++
++++++++++++++++++++
சூரிய கிரகணம் வானில் நிகழும் போது,
பேரளவு வட்டம் மறைக்கும் சிறு நிலவு.
முழுச் சூரிய மறைவு பல நூறாண் டுக்கு,
ஒருமுறை தெரிவது, அத்தருணம்
தடுமாற்ற நிலையில் கீழே கிடக்கும்
புவித்தட்டுப் பிறழ்ச்சி பல நேர்ந்து
பூமியில் நிலநடுக்கம் தூண்டப் படலாம் !
காலி போர்னியா நிலநடுக்கத் துக்கு
காரணம் முழுச் சூரிய கிரகணம் !
திடீர் உஷ்ண மாறுதல் புவித்தட்டில்
நீட்சி, நெருக்கம் உண்டாக் கலாம் !
கடலடியில் உறங்கும் எரிமலையும்
திடீர் உஷ்ண மாற்றத்தால் உடனே
விழித்து மேலே பீரிட் டெழலாம் !
++++++++++++++++
++++++++++++
சமீபத்தில் நிகழ்ந்த முழுச் சூரிய கிரகணத்தால் பூமியில் நேர்ந்த நிலநடுக்கங்கள்
2019 ஜூலை 2 ஆம் தேதி பசிபிக் பெருங்கடலில் தெரிந்த முழுச் சூரிய கிரகணம், 20 ஆண்டுகட்குப் பிறகு ஜூலை 7 ஆம் தேதி தூண்டப் பட்ட 5.4 / 7.1 ரிக்டர் அளவு தீவிர காலிஃபோர்னியா நிலநடுக்கங்களுக்குக் காரண மாக இருக்கலாம் என்று வானியல் விஞ்ஞானிகள் சமீபத்தில் ஒரு வியப்பான கருத்தை வெளியிட்டுள்ளார். அக்கருத்து 2019 ஜூலை 2 இல் விஞ்ஞானச் சுழல் நிகழ்ச்சி இணைய வலையில் [ScienceOfCycles.com]] வந்துள்ளது. வெளியிட்டவர் மிட்ச் பாட்டரஸ் [Science Of Cycles with Mitch Battros]. பெரும் பான்மை எரிமலைக் குழம்பு வாயுக் கட்டிகள், எரிமலைகள் [Mantle Plumes & Volcanoes] கடலுக்குக் கீழே தங்கிக் கிடப்பவை. ஆதலால் திடீர்க் கடல் உஷ்ண மாற்றம் அலை விசைகளைத் தூண்டி, எரிமலை சீறி எழலாம்.
முழுச் சூரிய கிரகணத்தால் நேரும் தீவிரக் காரண விளைவுகளை நான் குறிப்பிட்டு வந்திருக்கிறேன். விளிம்பில் தயாராய் நிகழ இருக்கும், புவித்தட்டுப் பிறழ்ச்சிகள் விரைவில் தூண்டப்பட நெடு நேரம் ஆகாது. பல நூற்றாண்டுக்கு ஒருமுறை வரும் முழுச் சூரிய கிரகணம், 3 அல்லது 4 நிமிடங்களே நீடிக்கும். அந்தக் குறுகிய தருணத்தில் வெகு விரைவாக இறங்கி ஏறும் உஷ்ண மாறுபாட்டில், பூமிக்கடியில் உள்ள மேல் கோளத் தட்டில் [Earth’s Lithosphere] மிகச் சிறிய நீட்சி, நெருக்கம் ஏற்படலாம்.
எரிமலைக் குழம்புப் பாறை, ஒரு கனல் கட்டி. அது பூமியின் நடுக் கருவை மேலே போர்த்திய வரம்பு. அந்தக் கனல் கட்டிக் குழம்பு ஓடிப் பூமியின் பல்வேறு கோளத் தட்டுகளை ஊடுருவி, எரிமலையாய் மேலே பீரிட்டெழச் செய்வது அடித்தட்டுப் பிறழ்ச்சி நில நடுக்கம் உண்டாக்குவது, அந்த நீட்சி, நெருக்க வினைகளே. மேலும் கடல் நீர் உஷ்ணம் மிகையாகிப் பருவ காலப் புயல்கள் எழுவதும் ஹரிக்கேன் உருவாவதும் வட அமெரிக்க நாடுகளில் நாம் அறிந்தவையே.
++++++++++++++++++++++++
தகவல்:
- https://mail.google.com/mail/
u/0/#inbox/ FMfcgxwChcgJbFQjpxXjsmVRSPZzCP MM - https://scienceofcycles.com/
update-2019-full-solar- eclipse-and-earth-changing- events/ - https://pmdvod.
nationalgeographic.com/NG_ Video/776/831/1005835843746_ 1500669678490_1005846083907_ mp4_video_1024x576_1632000_ primary_audio_eng_3.mp4 - https://scienceofcycles.com/
big-earthquakes-might-make- sea-level-rise-worse/ - https://www.travelandleisure.
com/trip-ideas/space- astronomy/next-total-solar- eclipse-july-2019 - https://www.sciencenews.org/
article/2019-total-solar- eclipse-south-americ
++++++++++++++++++++++++++
அன்புள்ள வல்லமை ஆசிரியருக்கு,
வணக்கம். அறிவியல் கட்டுரைகளைச் சுமக்கும் “அறிவியல்” தலைப்பு தனியாக இல்லாமல் எங்கோ ஒளிந்து கொண்டுள்ளது.
அதற்கு முகப்பு முதல் தோற்றத்தில் தனியிடம் தருமாறு வேண்டுகிறேன்.
சி. ஜெயபாரதன்,
கனடா