இலக்கியம்கவிதைகள்மரபுக் கவிதைகள்

அருள் வேட்டல்

ஏறன் சிவா

வற்றாத கற்பனை வேண்டும்  நாளும்

வளமான சிந்தனை வேண்டும் — கவிச்

சொற்சுடர் மதிதனில் வேண்டும் அவை

சோர்வுறாப் பயன்தரல் வேண்டும் — கருத்து

முற்றிய கவிதைகள் வேண்டும்  அவை

முடிவிலா  இசைபெறல் வேண்டும் — அதற்கு

நற்றமிழ் துணைவரல் வேண்டும் நெஞ்சின்

நடுவமர்ந் தருள்செய வேண்டும்!

 

 

 

 

 

 

Print Friendly, PDF & Email
Download PDF
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க