இதம், பதம், இயற்கை!

வேதா. இலங்காதிலகம்,
டென்மார்க்

தூர் வரை மனத்துள் புகுந்து
வேர் ஊன்றிய அன்புத் தேன்
தார் எனப் படியக் கருத்திட்டு
நார் போன்று பிணைந்து மனமேந்துங்கள்
சேர்ந்து நம்பிக்கையாய் நெருங்குங்கள்
நீர்க் குமிழி உறவு தேவையற்றது

பூவிதழின் மென்மையாய், கால்நனைய
பூரித்துச் சிதறும் அலைக்குளிர்மையாய்
பூமணல் மென்மையாய், தொலைதூரப்
பூஞ்சிறகுக் குருவியின்  கீச்சு மொழியாய்ப்
பூச்சிதறும் மனமிழையும் கணங்களினிமை
பூட்டின்றிப் பூரணையாய் பூரித்தலினிமை

மழைத்தூறல் சிறகடிக்க மனம்
மகிழ்ந்து வனமேகிக் கிளைகள் தேடுதலில்
நம்பகமின்றி மனம் மகிழலாம், இலை
ஈரங்களின் இதமான சிலிர்ப்பில் , மூங்கிலிசையில்
ஈரலிப்பற்ற மனிதத்திலும் இயற்கை சிறப்பு
ஈசனுக்கு இணையானதன்றோ இயற்கை

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *